மதுரை ஒரு பார்வை
நம்ம மதுரை வாய்ப்பே இல்லை.
நம்ம மதுரை வாய்ப்பே இல்லை.
எங்க இருந்து பாத்தாலும் நாலு கோபுரம்
அழகா தெரியும் மீனாட்சி அம்மன் கோவில்
அழகா தெரியும் மீனாட்சி அம்மன் கோவில்
தெருவெல்லாம் மணக்கிற மல்லிகைபூ மரிக்கொழுந்து
12 மாசமும் திருவிழா பசங்களோட ஆட்டம் தாவணி பொண்ணுங்க முளைப்பாரி
பசங்க கிரிக்கெட் விளையாட தெப்பக்குளம்,
சுத்தி சுத்தி பாக்க திருமலைநாயக்கர் மகால்
பள்ளிகூடம் போக செயின்மேரி சர்ச்
பொருட்காட்சி பாக்கனும்னா தமுக்கம்
பரபரப்பா இருக்க கோரிப்பாளையம்
ஞாயிற்று கிழமையானா அழகர் கோவில்
கறிக்கொழம்பு வாசத்துக்கு ஊரைக்காக்கும் பாண்டி கோவில்
கார்த்திகை மாசம் திருப்பரங்குன்றம்
ஜல்லிக்கட்டுக்கு அலங்கநல்லூர் பாலமேடு,
சேவகட்டுக்கு கொடாசண்டை அவனியாபுரம்
தாய் மாமன் சீருக்கு உசிலம்பட்டி
ஜில் ஜில் என குடிக்க ஜிகர்தண்டா ,
ஜங்ஸன் கிட்ட பிரேமவிலாஸ் அல்வா
ரோட்டோரம் இட்லிக்கடை,
1 மணிக்கும் பரோட்டா சால்னா,
கோனார் கடை கறி தோசை,
பனைமரத்து கடை பிரியாணி
அம்மா மெஸ் அயிர மீன் கொழம்பு.
பால்பன், போளி, வடை, பதாம் பால், பருத்திபால்,
கோலி குண்டு, கிட்டி விளையாடி பதநீ, நுங்கு சாப்பிட்டு வளந்தவங்க
கோலி குண்டு, கிட்டி விளையாடி பதநீ, நுங்கு சாப்பிட்டு வளந்தவங்க
தங்ரீகல் குரு தியேட்டர் வெற்றி தமிழ்ஜெயா மதி கலைவாணி இம்பாலாஓஆட்டம் போட்டு படம் பார்ப்போம். நாங்க அடிக்கிற விசிலு காத்துக்கு ஏசியே வேணாம்.
பஸ் ஸ்டாண்டுக்கு பெரியார் ஆரப்பாளையம் மாட்டுத்தாவணி
வடக்க எல்லை மேலூர் தெற்க எல்லை திருமங்கலம்
சோழவந்தான் வாடிப்பட்டி கல்லுப்பட்டி
சுப்பிரமணியபுரம் ஜெய்ஹிந்த்புரம் வில்லாபுரம் தெற்குவாசல் அனுப்பாணடி செல்லூர் ஒத்தக்கடை ஆரப்பாளையம் காளவாசல் எல்லா ஏரியாலயும் லந்து குடுப்போம்.
பொண்ணுங்க வந்தா அலப்பறை குடுப்போம்
பெரியவங்க வந்த மரியாதை குடுப்போம்
வம்புனு வந்தா ஏழரைய குடுப்போம்
நட்புனு வந்தா உசுரயே குடுப்போம்
பெரியவங்க வந்த மரியாதை குடுப்போம்
வம்புனு வந்தா ஏழரைய குடுப்போம்
நட்புனு வந்தா உசுரயே குடுப்போம்
வீரத்துல எங்கள போல யாரு பாசத்துல எங்கள மிஞ்ச யாரு மதுரை எங்க ஊரு !
இந்
த ஊரை போல வேற எந்த ஊரு.🎿🎿🎿🎿🎿🎿🎿
த ஊரை போல வேற எந்த ஊரு.🎿🎿🎿🎿🎿🎿🎿
kanagaraj



0 comments:
Post a Comment