Showing posts with label gurubaai. Show all posts
Showing posts with label gurubaai. Show all posts

Saturday, December 27, 2014

,

காதலுக்கு வாய் இல்லை -2

மறுனாள் காலை அரக்கபறக்க
எழுந்து, தேய்த்தும் தேய்க்காமல்,
குளித்தும் குளிக்காமல்
ஒரு வழக்கமான காலையாக ஆஃபீஸ்
செல்ல ஆயத்தமானான் பாலா. அடுத்த
5 நிமிடங்களுக்குள் அவன் அழுத்திய
பல்ஸர் அவனை ஆஃபீஸ்
சென்று சேர்த்தது. தன் கேபின்
வந்து சிஸ்டத்தை ஆன்
செய்து அப்பாடா என அமர்ந்தான்..
மொபைல் ஃபோனை எடுத்துப்
பார்த்தான்.. ஒரு குறும்செய்தி..
தெரியாத நம்பர்..! "ஹாஇ பாலா. இ
ஆம் மது..
மித்ரா உங்களை பற்றி சொல்லியிருக்காங்க"
என.!
♥♥♥
இதுவரை வானம் பார்க்காத
பருந்தென
பறந்து வானத்தை இரண்டுமுறை முட்டி தலையை வீங்கவைத்து.வந்தான்
பாலா..!! இன்டர்காமில் மேனேஜரின்
அழைப்பை சட்டை செய்ததாய்
தெரியவில்லை.. அதற்காக வாங்கிக்
கட்டிக்கொண்டதையும்
மறுப்பதற்கில்லை
....
"மது.. சொல்லுங்க..
எப்படி இருக்கீங்க..?" பதில் மெஸேஜ்
சென்றது.. ஆங்காங்கே அலுவலகப்
பணியினூடே எஸ்.எம்.எஸ்
நிறுவனத்திற்கு லாபம்
சம்பாதித்துக் கொடுத்துக்
கொண்டிருந்தான்.
.....
எங்கு படித்தோம், என்ன செய்கிறோம்
என்ற சராசரிகளைத் தாண்டி என்ன
பிடிக்கும் என்ற கட்டத்தில்
கான்வர்சேஷன்
போயிக்கொண்டிருந்தது.!
மது யாரிடமும் தன்
சுயசரிதங்களைச்
சொல்லிக்கொண்டதில்லை. யாரும்
கேட்க ஆவல் கொண்டதும் இல்லை..
பாலாவின் பேச்சும் இயல்பும்,
மது மேல் கொண்ட ஆவலும்
மதுவுக்கு ஒரு வித ஈர்ப்பைத்
தந்தது.. உண்மையில் அவள்
மித்ரா சொன்னதிற்காக பாலாவிடம்
பேச ஆரம்பித்தவள்தான்!
♥♥♥
அன்று சாயங்காலப் பொழுது..!
"எப்பவும் லேட்டா வர்றது எல்லாம்
ஒரு பொழப்பா?
ஒரு பொண்ணை வெய்ட் பண்ண
வைக்குறியே.. வெக்கமாயில்ல?",
மித்ரா.
"பொண்ணா? எங்க எங்க எங்க?.." பாலா.
" நீ என்ட மிதி வாங்கி ரொம்ப நாள்
ஆச்சுல? இருடா டேய்.." மிதா.
"ரொம்பப் பண்ணாதடி.. ஆஃபீஸ்
முடிஞ்சாதானே வரமுடியும்?
அப்பறம் ஒண்ணு சொல்லணும்..
ஹே மது எனக்கு மெஸேஜ்
அனுப்புனாங்க" பாலா.
"தெரியும்டா இத சொல்லதான் வர
சொல்லிருப்பனு.. பொரிக்கி"
மிதா...
....
"சரி இரு ஆர்டர் பண்ணீட்டு வறேன்..
கோல்டு காஃபீ தானே?.." பாலா.
"ச்சே.. நீ ஆர்டர் பண்றியா?
இருடா கிள்ளிப் பார்த்துக்கறேன்..!"
மித்ரா..
"உன்ன கொல்லப் போறேன்..
இருடி வர்றேன்!" பாலா..
பாலாவினுள் கண்டறியாத ஒரு மன
உந்திப்பை மித்ராவால்
காணமுடிந்தது..
இவ்வளவு நாட்களாகப் பேசுகிறோம்
நட்பு ரீதியை இவன் எந்த கணத்திலும்
தாண்டியதில்லை.. மதுவின் மேல்
இவனுக்கென்ன
இவ்வளவு ஈடுபாடு என
எண்ணிக்கொண்டிருந்த மித்ராவின்
மன ஓட்டங்களுக்கு, "இதோ யுவர்
காஃபீ.." என வந்தமர்ந்தான் பாலா.
....
"பசங்ககிட்ட
பேசணும்னாலே அலறுவா.
சொல்லப்போனா அவகிட்ட பேசதான்
பசங்க அலறுவாங்க. நான்
சொன்னதுக்கக உன்ட
பேசுனானு நெனைச்சேன். உன்கிட்ட
எப்புடிடா ராசியானா??"
மித்ரா ஆச்சர்யமாய்க் கேட்டாள்..
நடிகர் விஜய் தன் வாயில்
மென்று மீதம் வைத்த
கொழுக்கட்டையை கன்னம்
அருகே உருட்டுவதைப்போலே ஸ்டைலாக
வாயை வைத்துக் காட்டினான்..
"இங்க உன்ன வர
சொன்னது மது பத்தி டீட்டேயில்லா சொல்லுனு சொல்றதுகு..
என்கிட்ட கேள்வி கேட்க இல்ல.." என
கடிந்தான்..
"உன் அரட்டலுக்கு நான் ஆளா?" என
கையில் வைத்திருந்த
கோல்டு காஃபீயின் எதிர்ப்பதமாய்
பொங்கியவளை, "ஒரு ஃப்ரெண்டுக்கக
இதுகூட சொல்லமாட்டியா?!" என
ஆசுவாசப்படுத்தினான்..
மதுவைப் பற்றிய நினைவலைகளின்
மித்ரா மிதக்க ஆரம்பித்தாள்.!
-------------
மதுவின் அம்ம கேரளா.
அப்பா இங்கே கும்பகோணம்.. அவர்
கேரளா செல்கையில் காதலாகி,
கல்யாணம்
செய்து இங்கே அழைத்து வந்தார்.
அவர்களுக்கு பிறந்த தேவதைதான்
ஜென்ஸி(மது)..♥:-)
....
பிறந்த முதல் மது இயல்பான
குழந்தையாய் இல்லை.. எந்த
ஒரு தாலாட்டுக்கோ,
சீராட்டுக்கோ செவி சாய்க்கவில்லை..
ஒரு வயதில்தான்
தெரிந்தது மதுவிற்கு பிறப்பிலே வாய்
பேசவோ,
காதுகேட்கவோ முடியாது என!
......
அதிலிருந்து வீட்டில் சண்டை..
அப்பா குடியென கதி. இருவரும்
குழந்தையை சுமையெனப்
பார்த்தனர். அம்மா தன் தாய்
வீட்டிற்கே திரும்ப சென்றார்..
அப்பாவோ ஜென்ஸியை அவள் 3
வயர்தில் தெரிந்த ஒருவர்
தத்தெடுக்கக் கேட்டார் என
கொடுத்து விட்டு காணாமளே போனார்..!
....
ஜென்ஸி மதுவாக மாறினாள்.. அந்த
வீட்டில் அவள் இரண்டாவது மகள்
ஆனாள்.. தன் முதல் மகளுக்கு செய்த
அனைத்தையும்
ஒரு படி மேலே அவர்கள் செய்தனர்..
மதுவிற்கு நிணைவு தெரிந்த நாள்
முதல் இவர்கள்தான் அம்மா அப்பா..
மதுவின் பூர்வீகத்தை யாரும்
அவளிடமும் பேசிக்கொண்டதில்லை..
.....
மது தன் 5ஆம் வகுப்புவரை ஸ்பெஷல்
ஸ்கூல் எனப்படும் காது கேளாதோர்
பேச முடியாதவர்களுக்கான
பள்ளியில் படித்தாள்.. பின்
எல்லோரும் படிக்கும் பள்ளியில்
சேர்ந்தாள்.. அவளுக்கென்று நிரந்தர
நண்பர்கள் இல்லை..
அவ்வளவு இயல்பாக யாரும் பழகவும்
காரணிகள் இருந்ததில்லை..
னன்றாக புகைப்படம் எடுப்பள்..
அவளின் ஆர்வம்
அவளை சென்னையில் விஷுவல்
கம்யூனிகேஷனில் சேர்ந்தாள்..!
அங்கு அவளுக்கு அறிமுகம்
ஆனவள்தான்
அங்கு அவளுக்கு அறிமுகம்
ஆனவள்தான் நான் !" -
மித்ரா முடித்தாள்..
****
இருவரின் கண்களிலும்
நீர்கோர்த்து ஒருவரையொருவர்
பார்க்கும்முன் துடைக்க முற்பட்டனர் !

Publisher: Pavithran kalaiselvan - 2:14 AM

Monday, December 15, 2014

,

காதலுக்கு வாய் இல்லை ep1


காதலுக்கு வாய் இல்லை ep1
December 13, 2014
காலம் எந்த ஒரு வலிக்கும் பெரிய மருந்து.. இது என் வலியோ, என் மருந்தோ
பற்றியது இல்லை..!!
வானத்தில் இருந்து வந்த ஒரு மழையில் ஒரு துளி, சிப்பியில் விழுந்து
முத்தான ஒருகதை ....
..........
நான் ஒரு சிறந்த கதைசொல்லியும் இல்லை.. மிகப்பெரிய அனுபவசாலியும் இல்லை..
மது என்னும் கதாப்பாத்திரம் பாலா என்னும் கதாப்பாத்திரத்தில் வாழ்ந்த,
வாழும் காலங்கள் இந்த தொடர்கதை 'kaathalukku vaay illai' !!

"யாரோடு யாரென யார்தான் சொல்வாரோ.?"
....
கவிஞர் வாலி-யின் பலம் கொண்ட வரிகளே கதையின் மையக்கரு.. இவருடன் இவர் என
போடப்பட்டிருக்கும் முடிச்சுகளை அவிழ்ப்பதின் சுவாரஸ்யம் தான்
வாழ்க்கையின் அழுத்தத்தை அழகாகவோ, அழுகையாகவோ நிறம் மாற்றுகிறது.. இது
அழகும், அழுகையும் கலந்த காதல் கதை... !!!"
.....
இனி கதை.. !
-----------
மித்ரா: ஃபோன் எடுக்க இவ்வளோ நேரமா?? நீயெல்லாம் நல்லா வருவடா..

பாலா: ஆமா இவ பெரிய உலக அழகி..

gurubaai
Publisher: Pavithran kalaiselvan - 12:34 AM