Showing posts with label manoj. Show all posts
Showing posts with label manoj. Show all posts

Thursday, January 29, 2015

, ,

மிசோஃபோனியா

நாம் அனைவருமே இதைச் சந்தித்திருப்போம்!
சிலர் சாப்பிடும் பொழுது, பற்களைக்
கொண்டு ஓசையுடன் மெல்லுவார்கள்.
வேறு சிலரோ, மூச்சு விடும்
பொழுது அதிகமான ஒலி எழுப்புவார்கள்.
அப்பொழுதெல்லாம், இவர்களுக்கு என்ன
பிரச்சனை என்று உள்ளூர எரிச்சல்
அடைந்திருப்பீர்கள் அல்லவா? இந்த
எரிச்சலுக்குப் பெயர் உண்டு,
இதை மிசோஃபோனியா என்று அழைப்பார்கள்!
மிசோஃபோனியா என்பது "ஒலி வெறுப்பு"
என்ற பொருள் தரும். குறிப்பிட்ட ஒலிகள்
மூலம் எதிர்மறை உணர்வைத் தூண்டுவதே இந்த
மிசோஃபோனியா. இது ஒரு வகை நரம்பியல்
கோளாறு ஆகும். மிசோஃபோனியா நோய்
உள்ளவர்கள் வாழ்வில் அடிக்கடிக் கேட்கின்ற
ஒலிகளைக் கேட்டால் கூட பெருங்கோபம்
கொள்கின்றனர். சிரிப்பொலி, பல்
துலக்குவதால் ஏற்படும் ஒலி, குறட்டை ஆகிய
ஒலிகளும் இதில் அடங்கும்.
மிசோஃபோனியா எத்தனை சதவீத
மக்களுக்கு இருக்கிறது என்று சரியான
கணக்கீடு இல்லை. ஆனால், சில ஆராய்ச்சிகள்
பத்து சதவீத
மக்களுக்கு மிசோஃபோனியா இருக்கிறது என்று தெரிவிக்கிறது.
இன்னும் சில ஆராய்ச்சிகள் அறுபது சதவீத
மக்களுக்கு இருப்பதாகத் தெரிவிக்கிறது.

Publisher: Pavithran kalaiselvan - 4:50 AM

Sunday, January 25, 2015

, ,

ஓட்டுனருக்கு தெரிந்த விஷயம்; தெரியாத உண்மை...

வாகனங்களை ஓட்டத் தெரிந்த பலர், சாலைகளில் இடம் பெற்றவை குறித்து அறிந்திருப்பதில்லை.

இது குறித்து மதுரை டிரைவிங் நீட்ஸ் அகாடமியின்
பயிற்சியாளர் ஏ.நரசிம்மமணி கூறியதாவது:

* பகலில் முகப்பு விளக்குகளை எரியவிட்டு எதிரே வரும் வாகனத்தை எச்சரித்தபடி முன்னேறுவது குற்றம்.

* சாதாரண நேரங்களில் நான்கு புறங்களிலும் உள்ள எச்சரிக்கை விளக்கை எரிய விடுவது தவறு.

அபாயகரமான அல்லது வாகனம் பழுதாகி நிற்கும்போதோ, பழுதான வாகனத்தை பிற வாகனங்கள் இழுத்துச் செல்லும்போதோ எரியவிட வேண்டும்.

* சிக்னல்கள் அல்லது ரோட்டில் வாகனங்களை நிறுத்தி இருக்கும்போது, அனைத்து விளக்குகளையும் எரியவிடக் கூடாது.

* ரோட்டின் நடுவில் கோடுகளை குறிப்பிட்ட இடைவெளியில் விட்டுவிட்டு போட்டிருந்தால், ஒரு வாகனத்தை நாம் இந்த இடத்தில் முந்திச் செல்லலாம் என்று பொருள்.

அதேசமயம் தொடர்ச்சியான நீண்ட கோடுகளாக
போட்டிருந்தால் முந்தக் கூடாது என்று பொருள்.

* ரோட்டின் நடுவில் தொடர்ச்சியாக இரட்டைக் கோடுகள் போட்டிருந்தால், அதை ஒரு தடுப்புச் சுவராக கருத வேண்டும்.

* ஓட்டுனருக்கு 20.5 மீ (67 அடி) தொலைவில் இருந்து வரும் வாகனத்தின் பதிவு எண்ணை படிக்க முடிந்தால், கண்கள் நல்ல பார்வையுடன் உள்ளது என பொருள்.

எனவே, ஆண்டுக்கு ஒருமுறை ரத்த அழுத்தம், சர்க்கரை, கண்
பரிசோதனை செய்வது நல்லது.

* கனகர வாகனங்களின் பின்புறம் சிவப்பு நிற முக்கோண வடிவச் சின்னம் உள்ளது.

இது முற்றிலும் தவறு.

மோட்டார் வாகன சட்டப்படி, அது ஒரு
எச்சரிக்கை சின்னம்.

ரோட்டில் ஒரு வாகனம் பழுதாகி நின்றாலோ, அவசர
நிலையிலோ அதை வாகனத்தின் பின்புறம் 15 அடி தள்ளிதான் வைக்க வேண்டும்.

* நெடுஞ்சாலையில் எதிரே வரும் வாகனத்திற்கு வசதியாக முகப்பு விளக்குகளை 250 மீ.,க்கு முன்பே "டிம்' செய்ய வேண்டும்.

* வளைவுகளில் அதிவேகமாக ஓட்டிச் சென்றால் விபத்து நடக்கும்.

அதற்கு "இன் ஸ்லோ-அவுட் பாஸ்ட்' என்ற முறையில் செல்ல வேண்டும்.

அதாவது, மைய ஈர்ப்பு விசை, விலக்கு விசைகளின் அடிப்படையில், வளைவுகளில் நுழையும்போது மெதுவாகவும், பின் ஆக்ஸிலேட்டரை லேசாக அழுத்தியும் செல்ல வேண்டும்.

ஆனால் பலர் வேகமாகவே நுழைந்து பிரேக் அடித்து
திரும்புகின்றனர்.

இதனால் வாகனம் கவிழ்ந்துவிடும்.

* கார்களில் செல்வோர் "சீட் பெல்ட்' அணியும்போது

சட்டைப் பையில் போன், பேனா, சில்லரை காசுகள் வைத்திருப்பதை தவிர்க்க வேண்டும்.

பெண்கள் அதிக நகை அணிந்திருக்கக் கூடாது.

அசம்பாவிதம் நேரிட்டால் அந்த பொருட்களே பயணிக்கு எமனாக மாறிவிடும்.

* நான்கு வழிச் சாலையின் நடுவே மீடியனில் அரளி செடிகளையே வைத்துள்ளனர்.

காரணம் எதிரே வரும் வாகனத்தின் முகப்பு விளக்கு ஒளியில்
இருந்து கண்களை பாதுகாக்கும்.

வறட்சியையும் தாங்கும் இச்செடிகளின்
வேர்கள் அதிகம் வெளி வராது.

இது வாகனங்களின் கார்பன் டை ஆக்சைடை
அதிகம் "அப்சர்வ்' செய்கிறது.

விலங்குகளும் இவற்றை உண்பதில்லை.

* நமக்கு அவசர அழைப்பு எண் 108 என்பது தெரியும். மற்றுமொரு எண் 112 என்பது பலருக்கு தெரியாது.

மொபைல் போன் "சிக்னல்' இல்லாத
இடங்களிலும், மொபைலின் "கீ லாக்' செய்யப்பட்ட நிலையிலும், ஏன் "சிம்கார்டு' இல்லாத நிலையிலும்கூட இந்த எண்ணை அவசர உதவிக்கு பயன்படுத்தலாம்.

மொத்தத்தில்விவேகமான வேகமே விபத்துக்களில் இருந்து பாதுகாப்பு

இந்த நல்ல விஷயத்தை பலருடன் பகிரலாமே!!!!

Publisher: Pavithran kalaiselvan - 12:28 AM

Saturday, January 17, 2015

,

மாரடைப்பு சில பாதுகாப்பு தகவல்கள்

�� வீட்டில் �� தனியாக இருக்கும் போது மாரடைப்பு ��

�� வீட்டில் தனியாக இருக்கும் போது மாரடைப்பு வந்தால் உங்களை நீங்களே எப்படி காப்பாற்றிக்கொள்வது ❓

�� வேலை பளுவின் காரணமாக, மற்றும் இதர சில ��  பிரச்சனைகள் காரணமாக உங்கள் �� மனம் மிகவும் அழுத்தத்துடன் உள்ளது,

�� நீங்கள் மிகவும் �� படபடப்பாகவும், �� தொய்வாகவும் உள்ளீர்கள்.

�� திடீரென்று உங்கள் �� இதயத்தில் அதிக "வலி" ஏற்படுவதை உணர்கிறீர்கள்.

�� அந்த வலியானது மேல் கை முதல்தோள்பட்டை வரைபரவுவதை உணருகிறீர்கள்.

�� உங்கள் வீட்டில் இருந்து �� மருத்துவமனை ஒரு ஐந்து
மைல் தூரத்தில் இருப்பதாக வைத்துக்கொள்வோம்.

�� ஆனால் உங்களால் அந்த ஐந்து மையில் தூரத்தை கடக்க முடியாது என உங்கள் �� மூளை உங்களுக்கு சொல்கிறது

�� இந்த நேரத்தில் நம் உயிரை நாமே காக்க என்ன செய்யலாம்...??

�� துரதிஷ்ட வசமாக �� மாரடைப்பு ஏற்படும் போதெல்லாம் இறப்பவர்கள் அதிகமாக தனியாக இருந்திருப்பவராக உள்ளனர்..!

✊ உங்கள் இதயம் தாறுமாறாக துடிக்கிறது..

�� நீங்கள் சுயநினைவை இழக்க வெறும் 10 நொடிகள் தான் உள்ளது.

�� இப்போது நீங்கள் செய்ய வேண்டியது:

"தொடர்ச்சியாக மிக ஆக்ரோஷமாக �� இரும்ப வேண்டும்,

�� ஒவ்வொரு முறை இரும்புவதர்க்கு முன்னரும் �� மூச்சை இழுத்து விட வேண்டும்,

�� இருமல் மிக ஆழமானதாக இருக்க வேண்டும்,

�� இருதயம் இயல்பு நிலை திரும்பும் வரையில அல்லது �� வேறொருவர் உதவிக்கு வரும் வரையிலோ

�� ஒவ்வொரு இரண்டு நொடிக்கும் மூச்சை இழுத்து விட்டு இரும்பிக்கொண்டே இருக்க வேண்டும்.

�� மூச்சை இழுத்து விடுவதினால் நுரை ஈரலுக்கு ஆச்சிஜன் சீராக செல்ல வழி வகுக்கிறது,

�� இருமுவதால் இருதயம் நிற்பதில் இருந்து தொடர்ச்சியாக துடித்துக்கொண்டே இருக்க உதவும்,

���� இதனால் ரத்த ஓட்டம் சீரடையும்.

�� இரும்புவதால் ஏற்படும்
அதிர்வினால் இதயம் சீராக துடிக்கும்"..

�� பின்னர் இருதயம் சீரடைந்ததும், அருகில் உள்ள �� மருத்துவமனைக்கு செல்லலாம்..

�� இந்த தகவலை �� குறைந்தது உங்களின் பத்து நண்பர்களுக்காவது பகிருங்கள். �� �� ��

❌ தேவை இல்லாத விசயங்களையும், ஜோக்குகளையும் பகிர்வோர்,
✅ உயிரை காக்கும் இது போன்ற விசயங்களையும் பகிருங்கள்....!!
           �� �� ��
�� வாட்ஸ்அப்பிர்க்காக �� பகிருபவர்
�� டாக்டர். மு. இஃப்திகார்
@ �� +919894487919

Publisher: Pavithran kalaiselvan - 9:32 PM

Thursday, January 15, 2015

,

பொங்கல் விழா

பொங்கல் விழா எப்போதும்
நான்கு நாட்கள்
கொண்டாடப்படுகிறது.
அவை முறையே போகி,
பொங்கல், மாட்டுப் பொங்கல்,
காணும் பொங்கல்.
இந்த நான்கையும் பற்றி பல
ஆண்டுகளாகவே பலர் தவறான
விளக்கங்கள் கூறி வருகிறார்கள்.
`போகி நாள்’ என்பதைப்
`போக்கி நாள்’ என்கிறார்கள்.
அதாவது வீட்டிலுள்ள கழிவுப்
பொருட்களை, பழையனவற்றைப்
`போக்கும் நாள்’ என்கிறார்கள்.
எப்போதுமே சுத்தப்படுத்தும்
நாளை ஒரு திருநாளாக எந்தக்
காலத்திலும்
கொண்டாடியதில்லை.
`போகி’ என்ற
வார்த்தை தெளிவாகவே இருக்கிறது.
விளைச்சல் என்பது, `போகம்’
என்படும்.
போகத்துக்குரியவன்
நிலச்சுவான்தார். அதனால் தான்
அந்த விழா, நிலம் உள்ளவர்களின்
வீட்டில் மட்டும் தடபுடலாக
இருக்கும்.
போகத்துக்குரியவனின்
விழா `போகி விழா’
வயலில் இறங்கி உழைக்கும்
விவசாயிக்கு உள்ள விழா,
`பொங்கல் விழா’. அவனுக்குப்
பயன்படும் மாடுகளுக்கான
விழா, `மாட்டுப் பொங்கல்’
விழா.
அந்த உணவைப்
பகிர்ந்து கொள்ளும் நிலமும்
இல்லாத, விவசாயமும் செய்யாத
பொதுமக்களின் விழா, `காணும்
பொங்கல்’ விழா.
இதுதானே வரிசை.
நிலத்துக்குரியவன்,
விவசாயி,
காளை மாடு,
பொதுமக்கள்.
நான்கு நாள் விழாவிலும்
பொங்கல் என்பது
திறந்த
இடத்திலேயே வைக்கப்படும்;
அதாவது சூரிய வெளிச்சம்
படுகிற இடத்தில்.
அது வானத்துக்குச் செலுத்தும்
நன்றி.
ஆரோக்கியத்திற்காக எந்தெந்தப்
பொருட்களை உபயோகப்படுத்துகிறோமோ,
அவை எல்லாம்
பொங்கலிலே பயன்படுத்தப்படும்.
திருவிழாக்களின்
வார்த்தைகளையும்,
நோக்கங்களையும்,
அடிப்படைகளையும்,
புரிந்து கொள்ளாமல் பலர்
விளக்கம் கூறி விடுகிறார்கள். இனியாவது பண்டிகைகளின் நோக்கம் அறிந்து கொண்டாடுவோம்..
அனைவருக்கும் இனிய பொங்கள் திருநாள் நல்வாழ்த்துகள் 🌞
Publisher: Pavithran kalaiselvan - 5:58 AM

Tuesday, January 6, 2015

,

நவமணிகள் [GEMS]


பெரும்பாலான மணிகள்[முத்து,பவழம் தவிர்த்து] எரிமலைக்குழம்பிலிருந்து உருவானவை.இவை கனிம தாதுக்கள் ஆகும்.ஒளிவீசும் காரணத்தால் இது மணி எனலாயிற்று. மணி என்றால் ஒளி, அழகு எனப்படும்.

இந்தமணிகளின் வயது 100கோடி ஆண்டுகள்முதல் 500 கோடி ஆண்டுகள் வரை எனக் கணக்கீடு கூறுகிறது.பண்டைய மணிதன்
18 மணிகள் மட்டுமே அறிந்திருந்தான்.கணிமங்கள் 2000 வரை உள்ளன.இவற்றில் மணிகள் 85 மட்டுமே.இவற்றில் 16 மணிகள்
மட்டுமே நகைக்கு பயன்படுகின்றன.எந்த மணியும் 100% சுத்தமாக இருந்தால் நிறம் கிடையாது.மணிக்குள் தூசு போல் இருக்கும் தனிமம்தான் நிறத்தைத்தருகிறது. மணிக்குள் ஊடுருவும் ஒளி சிதறுவதால் ‘பளிச்’ என கண்சிமிட்டுகிறது.

மணிகளுக்குள் அமையும் தனிமத்திற்கேற்ப மணிகளின் நிறம் அமைகிறது. குரோமியம்-சிவப்பையும்,அலுமனியம்-பச்சை நிறத்தையும்,டைட்டோனியம்-நீலத்தையும்,இரும்பு-மஞ்சள் நிறத்தையும் தரும்.கடுமையான பொருட்க்களில் ஒளி ஊடுருவிச்செல்லும் போது அதன் வேகம் நொடிக்கு 1லட்சத்து 23 ஆயிரம் கி.மீ.ஆகும். மணியில்படும் ஒளியானது ஊடுருவி வெளியேற முடியாமல் எதிரொளித்து ஒளி வெள்ளமாக மின்னுகிறது. ஒளி ஊடுருவும் வேகம் குறையக்குறைய மணியின் தரம் உயர்கிறது.

இம்மணிகள் அந்நாளில் ஆற்றுப்படுகைகளிலும்,கடற்கரை மணலிலும் கிடைத்தன.மண்னுக்கு மேலே கிடைப்பது மணிகள்
மண்னுக்குள் தோண்டியெடுப்பது கனிமங்கள்.மணிகள் தனிமங்கள் பல இருந்தும் நவமணிகள் என ஏன் 9-ஐ மட்டும் நம் முன்னேர்கள் சிறப்பித்தார்கள் என்பது புரியவில்லை.

1.முத்து [PEARL]
உருண்டையாக முற்றுப்பெற்ற வடிவத்தினால் முத்து என்றாயிற்று. பெர்ல்-இந்த ஆங்கிலப்பெயர் பால் எனும் தமிழ் சொல்லிலிருந்து பிறந்தாகும். பாண்டியன் மனைவியின் காற்ச்சிலம்பு முத்துக்கள் உடையது[“யாமுடையச் சிலம்பு முத்துடை அரியே”சிலப்பதிகாரம்] அரி- பால் .

முத்துக்களில் ஆணிமுத்து,கட்டாணிமுத்து சிறந்தது.முத்தில் பழுப்பு, பச்சை,நீலம்,இளஞ்சிவப்பு,கறுப்பு நிறத்திலும் உள்ளன.
மழைத்துளி அல்லது பனித்துளி ஒன்று சிப்பியில் விழுந்து முத்தாகும் என்பது மக்கள் நம்பிக்கை ஆனால் கடலில் வெதுவெதுப்பான நீரோட்டமுள்ள இடத்தில் வாழும் சிப்பியின்உள்ளே சென்றுவிடும் மணல் புழுபோன்ற சிப்பியை உறுத்தல் செய்ய ஒருவித நீர்மம் [epithelium] சுரக்கிறது.பளபளப்பான சுண்ணாபுச்சத்துள்ள நீர்மம் மணலைச்சூழ்ந்து கெட்டியாகிறது.
இதுவே முத்தான “முத்தா”கிறது.

முத்தின் ஆயுள் 100 ஆண்டு முதல் 300ஆண்டுகள். இதன் வேதியல் பெயர் கால்சியம் கார்பனேட் …

2. பவழம் [CORAL ]
முத்துபோன்று கடலில் விளையும் ஒரு மணி பவழம். இதன் நிறம் பொதுவாக சிவப்பு என்றாலும் வெள்ளை,நீலம்,கறுப்பு நிறங்களிலும் உள்ளது.முத்தைப்போலவே வெதுவெதுப்பான நீர்ப்பகுதியில் பவழம் விளையும்.பவழப்பூச்சி[பாலிப்]எனும் கடல்வாழ் உயிரினம் கரையான்போல் கட்டும் புற்றே பவழப்பாறையாகிறது. இது பாறைபோல் இருக்காது,பல கொடிகள் கிளைகளையுடைய மரம்போல் இருக்கும். இதன் வேதியல் பெயரும்-கால்சியம் கார்பனேட் தான்.

3. வைரம் [Diamond]
ஆப்ரிக்கா,தென் ஆப்ரிக்கா நாடுகளில் அதிகம் தோண்டி எடுக்கப்படுகிறது.மண்னுக்கடியில் 1 கி.மீ ஆழத்தில் வைரம் கிடைக்கும்.சுத்தமான வைரம் நீரில் மிதக்கும்.நிறமற்ற வைரமே உயர்ந்த தரம்.இது பச்சை,சிவப்பு,மஞ்சள்,நீலம்,சாம்பல் நிறங்களிலும் கிடைக்கிறது.விலையுயர்ந்த வைரம் ஒரு சாதாரண கறித்துண்டுதான்,ஒரு துண்டு கரி,ஒரு துண்டு வைரம் இரண்டையும் எரித்தால் மிஞ்சுகின்ற சாம்பல் ஒரே தன்மையுடையது தான்.
இதன் வேதியல் பெயர்-கார்பன் இரும்பு ஆக்சைடு.

4. வைடூரியம் [Lapis Lazuli]
இது பூனைக்கண் எனவும் கூறுவர்.”தீதறு கதிர்”என சிலப்பதிகாரம் இதைக்கூறுகிறது.பொதுவாக இது பொன்னிறம் உடையது.

5. நீலம் [Saphire]
நீலநிறத்தின் காரணமாக இப்பெயர் பெற்றது.சங்ககாலத்தில் மணி என்றாலே நீலத்தைத்தான் குறித்தது.”நின்னது திகழொளி சிறப்பிருள் திருமணி”[பரி பாடல்]நீலமணிகள் வான்நீலம்,கடல்நீலம் எனவகைப்படுத்தப்படும்.இதில் வான்நீலமே சிறந்தது.நீலமணி ஆரஞ்சு,மஞ்சள்,பச்சைநிறங்களிலும் கிடைக்கிறது.அவற்றை சிவப்புநீலம்,கொம்புநீலம் என்பர்.
பால் பாத்திறத்தில் நீலக்கல்லைப்போட்டால் பால் நீலநிறமாக தெரியும்.இதுவெ உயர்ந்தநீலமாகும். இலங்கை நீலம்தான் உலகப்புகழ் பெற்றது.அமெரிக்காவில் வாஷிங்டனில் உள்ள லிங்கன்,கென்னடி சிலைகளின் முகம் மட்டும் நீலமணிகள்.
அலுமனியம் ஹைட்ராக்சைடு இதன் வேதியல் பெயர்.

6. மரகதம் [Emerald]
Emerald என்பது பாரசீகச்சொல் இத்ற்கு பச்சை என்பது பொருள்.பண்டைக்காந்தொட்டே மனிதன் அதிகம் விரும்பும் மணியாகும்.வைரத்தின் அளவுக்கு மதிப்புள்ளது.இதில் உள்ள குரோமியம் இதற்கு பச்சைநிறத்தைத்தருகிறது.
கொலம்பியா,வட கலிபோர்னியா பகுதிகளில் அதிகம் கிடைக்கிறது.
போராஸ் அலுமியம் ஆக்சைடு இதன் வேதியல்பெயராகும்.

7. மாணிக்கம் [Ruby]
அழகு,ஒளி,மினுமினுப்பு எல்லாவற்றிலும் வைரத்தை விட மாணிக்கம் சிறந்தது. வட மொழியில் இரத்தினம்,மற்றும் பதுமராகம்[தாமரைச்சிவப்பு] என்பர்.சிவப்பு நிறத்தைக்குறிக்கும்’ரூபஸ்’என்னும் இலத்தீன் சொல்லிலிருந்து ரூபி எனும் ஆங்கிலச்சொல் பிறந்தது.
“மழபாடியுள் மாணிக்கமே”என தேவாரம் பாடுகிறது.
“என் காற்சிலம்பு மணியுடை அரியே !”என்கிறது சிலப்பதிகாரம்.
இதன் வேதியல் பெயர்-அலுமனியம் ஆக்சைடு.

8. கோமேதகம் [Sardonyx or Hassinet]
நவ மணிகளில் விலை குறைந்தது கோமேதமே!
பசுவின் சிறுநீர் போன்ற நிறத்துடன் இருப்பதால் இப்பெயர் பெற்றது.
இதன் வேதியல் பெயர்-புளூரின் ஹைட்ராக்சைடு.

9. புஷ்பராகம் [Topaz]
‘ டோபாஸ்’ என்றால் மஞ்சள்கல் எனப்படும்.இது குறைந்தவிலையில் கிடைப்பதால் ஏழைகளின் வைரம் எனப்படும். இதன் வேதியல் பெயரும் புளூரின் ஹைட்ராக்சைடு தான்.

Publisher: Pavithran kalaiselvan - 4:05 AM

Monday, January 5, 2015

,

சர்வதேச உலக # வேட்டிகள் தின நல் வாழ்த்துக்களுடன்

சர்வதேச உலக # வேட்டிகள்
தின நல் வாழ்த்துக்களுடன்,
இனிய காலை வணக்கம்
அனைத்து நட்பூக்களுக்கும்...
# வேட்டி - # வேஷ்டி
பெரும்பாலோர் ஆண்கள் அணியும்
இந்த அழகிய
உடையை வேஷ்டி என்று தான்
சொல்கிறார்கள்.
ஆனால் அது வேட்டி என்னும்
தமிழ்ச்சொல் வடக்கே போகும்
போது வேஷ்டி என்று ஆனது என்று தமிழறிஞர்கள்
ஐயம் திரிபற உணர்த்தியுள்ளார்கள்.
நீளமான
துணியை வெட்டி அணிவதால்
அதற்கு வெட்டி -
வேட்டி என்று பெயர்.
அது வடமொழிக்குச் சென்ற போது ட்
ஷ் ஆகி வேஷ்டி ஆகிவிட்டது.
ஆனால் நம்
மக்களிடையே வேஷ்டி என்பதே சரியான
சொல் என்பது போலவும்
வேட்டி என்பது அந்த
சொல்லை வலிந்து தமிழ்ப்படுத்திய
தால் வந்த சொல் என்பது போலவும்
ஒரு எண்ணம் நிலைத்திருக்கிறது.
அது மாற வேண்டும்.
வேட்டி என்பதே சரியான சொல்.
அதிலிருந்து பிறந்ததே வேஷ்டி என்பதை உணர்ந்து இனிமேல்
'வேட்டி' என்ற
சொல்லை மட்டுமே புழங்கவேண்டும்.
தமிழன் என்ற உணர்வுடன்,
பகிர்ந்து கொள்ளுங்கள் நட்பூக்களே!

Publisher: Pavithran kalaiselvan - 7:38 PM

Sunday, January 4, 2015

,

எதில் மகிழ்ச்சி...... ???

எதில் மகிழ்ச்சி...... ???

ஒரு பெரிய ஹாலில் செமினார் நடந்து கொண்டிருந்தது. அப்போது பேச்சாளர் எல்லார் கையிலும் ஒரு பலூனை கொடுத்து தங்கள் பெயரை எழுத சொன்னார்.

எல்லோரும் தங்கள் பெயரை பலூனில் எழுதி முடித்தவுடன், அதை இன்னொரு அறையில் நிரப்ப சொன்னார். இப்பொழுது அந்த பேச்சாளர், உங்கள் பெயர் எழுதிய பலூனை அந்த அறைக்குள் இருந்து எடுத்து வாருங்கள் என்று அறிவித்தார்.

உடனடியாக அனைவரும் விழுந்து அடித்து அந்த அறைக்குள் ஓடிச் சென்று ஒவ்வொரு பலூனாக எடுத்து தேடினர் . ஒருவருக்கொருவர் நெக்கி தள்ளிக் கொண்டு கீழே விழுந்து தங்கள் பெயருக்குரிய பலூன் கிடைக்கிறதா என்று பரபரப்பாக தேடினர். 5 நிமிடம் கடந்த போதிலும் ஒருவராலும் தங்களுக்குறிய பலூனை தேடி கண்டு பிடிக்க முடியவில்லை.

இப்பொழுது அந்த பேச்சாளர் சொன்னார், ’ஒவ்வொருவரும் ஒரு பலூன் மட்டும் எடுங்கள், அந்த பலூனில் யார் பெயர் இருக்கிறதோ அதை அந்த பெயர் உடைய நபரிடம் கொடுங்கள்’ என்றார்.

அடுத்த ஒரே நிமடத்தில் தங்கள் பெயர் எழுதப்பட்ட பலூன் எல்லோருக்கும் கிடைத்துவிட்டது.

இப்பொழுது அந்த பேச்சாளர் சொன்னார், ’இது தான் வாழ்க்கை. எல்லோரும் மகிழ்ச்சியை தேடுகிறோம், ஆனால் அது எங்கே, எப்படி, எதில் கிடைக்கும் என்று நினைப்பது இல்லை’.

’நம்ம சந்தோஷம் அடுத்தவர்களுக்கு உதவுவதில் தான் இருக்கிறது. அடுத்தவர்களுக்கு மகிழ்ச்சியை கொடுங்கள், உங்கள் மகிழ்ச்சி உங்களை தேடி வரும்’.

Publisher: Pavithran kalaiselvan - 11:13 PM
,

உங்கள் போனிலிருந்தே எந்த நம்பருக்கும் இலவசமாக போன் செய்யலாம்...

உங்கள் போனிலிருந்தே எந்த நம்பருக்கும்
இலவசமாக போன் செய்யலாம்... இன்டர்நெட்
தேவையில்லை......!!
சில நேரங்களில் முக்கியமான
நபர்களுக்கு நாம் போன்
செய்ய வேண்டியிருக்கும். ஆனால்
நமது போனில் பேலன்ஸ் இருக்காது. ஆள்பேர்
இல்லாத இடத்தில்
மாட்டிக்கொண்டிருப்போம். இன்டர்நெட்
வசதியும் இருக்காது.. போன் செய்ய
முடியாமல் போய், நமக்கு அதனால்
இழப்பு ஏற்படும் இல்லை எனில்
யாரிடமாவது திட்டு வாங்குவோம்.
இனி அந்த நிலை ஏற்படாது.
பெங்களுரை சேர்ந்த 3 மாணவர்கள்
சேர்ந்து FREEKALL என்ற சேவை அறிமுகம்
செய்துள்ளனர். இதன் மூலம்
நமது போனிலிருந்தே இலவசமாக கால்
செய்து கொள்ளலாம். இதற்கு இன்டர்நெட்
தேவையில்லை. சாதாரண black & white Nokia
போன்போதும். ஐபோன் (iphone) முதல்
சாதாரண சைனாபோன் வரை அனைத்திலும்
இது வேலை செய்யும்.
ஆச்சரியமாக உள்ளதா ஆம் இது உண்மைதான்!.
இந்த
சேவையை பயன்படுத்தி எப்படி இலவசமாக
போன் செய்வது என்பதை பார்ப்போம்.
முதலில் நாம் நமது போனில் இருந்து ”1800
108 4444” என்ற
Toll Free நம்பருக்கு போன் செய்யவேண்டும்
(இந்தியஎண்ணிலிருந்து).
இதற்கு நமது போனில் பேலன்ஸ் இருக்க
வேண்டிய அவசியம் இல்லை.
அப்படியே பேலன்ஸ் இருந்தாலும் பணம்
எடுக்கப்பட மாட்டாது. நாம் இந்த
நம்பருக்கு கால் செய்ததும் கால் தானாக கட்
ஆகிவிடும். கட் ஆன அடுத்த நொடியில்
”8067915000” என்ற எண்ணில்
இருந்து நமது போனிற்கு (mobile) கால்வரும்.
அதை நாம் attend செய்து நாம் யாருக்கு போன்
செய்ய
வேண்டுமோ அவர்களது நம்பரை ( phone
number) dial செய்து அவர்களுடன் இலவசமாக
பேசிக்கொல்லாம்.
வித்தியாசமான சேவைாக இருக்கின்றதல்லவ
ா? ஆம் இந்த சேவையை கடந்த மார்ச் மாதம்தான்
பெங்களுர் மாணவர்கள் ஆரம்பித்துள்ளார்கள்..
இப்பொழுதே பயன்படுத்தி பயன்
அடையுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இந்த
தகவலை share செய்யுங்கள்.
பின்வரும் FREEKALL சேவை இணைய
தளத்திற்கு சென்று உங்கள் மொபைல்
நம்பரை பதிவு செய்து கொண்டு நீங்கள்
இந்தியாவில் உள்ள
யாருக்கு வேண்டுமானாலும் இலவசமாக போன்
செய்யலாம். DND நம்பர்களுக்கும்
இது வேலை செய்யும்.
ஆங்கிலத்தில் சுருக்கமாக:
One can make the use of this service by
following way:
1. Call at 1800 108 4444 after which the call
will drop.
2. You will receive a call on your number from
08067915000.
fcall போன்ற இணையதளங்கள் இந்திய
எண்களுக்கு இவலசமாக போன் செய்யும்
வதியை தந்தாலும் அவைகளை பயன்படுத்த
நமக்கு இன்டர்நெட் தேவைப்படும். மேலும்
அவை DND நம்பர்களுக்கு வேலை செய்யாது.
ஆனால் freeKall இதிலிருந்து முற்றிலும்
மாறுப்பட்டது மிக
எளிதானது என்பது குறிப்பிடதக்கது.
இதை உருவாக்கிய பெங்களுர்
மாணவர்களை பாராட்டியே ஆகவேண்டும்
இப்பொழுதே பயன்படுத்தி பயன்
அடையுங்கள். உங்கள்
நண்பர்களுக்கும் இந்த தகவலை share
செய்யுங்கள்...!
நன்றி-நட்பென்றால் நாம் என்போம

Publisher: Pavithran kalaiselvan - 11:05 PM

Saturday, December 27, 2014

,

மூன்று விஷயங்கள்.!

1.மூன்று விஷயங்கள் யாருக்காகவும் காத்திருப்பது இல்லை...

நேரம்
இறப்பு
வாடிக்கையளர்கள்

2.மூன்று விஷயங்கள் சகோதர சகோதரிகளையும் விரோதியாக்கும்...

நகை
பணம்
சொத்து

3.மூன்று விஷயங்கள் யாராலும் திருடமுடியாது...

புத்தி
கல்வி
நற்பண்புகள்

4.மூன்று விஷயங்கள் ஞாபகம் வைத்திருப்பது அவசியம்...

உண்மை
கடமை
இறப்பு

5.மூன்று விஷயங்கள் வெளிவந்து திரும்புவதில்லை...

வில்லிலிருந்து அம்பு
வாயிலிருந்து சொல்
உடலிலிருந்து உயிர்

6.மூன்று பொருள்கள் வாழ்க்கையில் ஒருமுறைதான் கிடைக்கும்...

தாய்
தந்தை
இளமை

7.மூன்று பொருள்கள் திரை மறைவுக்கு உகந்தது...

சொத்து
ஸ்திரி
உணவு

8.இந்த மூன்று பேர்களுக்கும் மரியாதை கொடு...

தாய்
தந்தை
குரு

Publisher: Pavithran kalaiselvan - 1:29 AM
,

உலகின் வியப்பூட்டும் வினோத சட்டங்கள் - அவசியம் அறிக..


உலகின் வியப்பூட்டும் வினோத சட்டங்கள் - அவசியம் அறிக..
உலகின் பல்வேறு நாடுகளில் வியப்பூட்டும் பல வித்தியாசமான சட்டங்கள் அமுலில் உள்ளன.
அமெரிக்காவின் சான் ஃபிரான்ஸிஸ்கோ மற்றும் இத்தாலியில் புறாக்களுக்கு உணவளிப்பது தண்டனைக்குரிய குற்றமாகும்.

கனடாவில் 10 டொலருக்கு அதிகமாக பொருள் வாங்கிவிட்டு, சில்லறையாக பணத்தினை செலுத்துவதற்கு தடையுள்ளது.

ரஷ்யாவின் மாஸ்கோவில், பொதுமக்கள் தங்கள் சொந்த வாகனமான கார் போன்றவற்றை சுத்தமாக வைக்காவிட்டால் பொலிசாரால் அபராதம் விதிக்கப்படும்.

சிங்கப்பூரில் சுவிங்கம் மெல்ல தடை உள்ளது. மருத்துவர் பரிந்துரைத்தால் மட்டுமே சுவிங்கம் மெல்ல அனுமதி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவின் வாஷிங்கடனில் நோயை வெளிக்காட்டக் கூடாது. நோயுடன் வெளியே வந்தால் அபராதம் முதல் சிறைத் தண்டனை வரை கிடைக்க வாய்ப்புள்ளது.

ஜப்பான் நாட்டில் மக்கள் குண்டாக இருக்க கூடாது என்ற விந்தையான சட்டம் உள்ளது.

டென்மார்க் ஹொட்டல்களில் சாப்பிடும் மக்கள், தங்கள் வயிறு நிறையவில்லை என்று கருதினால் சாப்பாட்டிற்கு பணம் செலுத்த தேவையில்லை.

டென்மார்க்கில் பகலில் சாலையில் சென்றாலும் வாகனத்தின் விளக்குகளை ஒளிரவிட்டு தான் செல்லவேண்டும், இல்லையெனில் அபராதம் விதிக்கப்படும்.

அமெரிக்காவின் கலரோடாவில் விவசாயிகள் உட்பட பொதுமக்கள் மழை நீரை சேமிப்பது தண்டனைக்குரிய செயலாக கருதப்படுகிறது.

ஜேர்மனியின் நகரம் ஒன்றில், வாகனத்தின் எரிபொருள் பாதியில் தீர்ந்து சாலையில் வாகனம் நின்றால் அது தண்டனைக்குரிய குற்றமாகும்.

சவுதி அரேபியாவில் பெண்கள் வாகனம் ஓட்டுவது சட்டப்படி தடை செய்யப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியாவின் விக்டோரியாவில் வீட்டில் பழுதடைந்த மின்சார பல்பை மாற்றுவதற்கு கூட சான்று பெற்ற எலக்ட்ரீசியன் வரவேண்டும்.

Publisher: Pavithran kalaiselvan - 1:27 AM