Showing posts with label magazinerel6. Show all posts
Showing posts with label magazinerel6. Show all posts

Sunday, January 25, 2015

, ,

நூலகங்கள் - நூலகதேசம் இயக்கம்

நூலகங்கள்..................
எழுத்தாளர்கள் என்னும் 
பீனிக்ஸ் பறவைகள் எழுதிய
புத்தகங்களின் சரணாலயம்…
நூலகம்…. சாமான்ய மனிதனையும் சாதனையாளனாக மாற்றக்கூடிய ஒரே பயிற்ச்சிப் பட்டறை. ஒரு வங்கியில் பல கோடி ரூபாய் இருக்கும் ஆனால் பாஸ்புக் வைத்திருக்கவும் ஒருவரால் அவருக்கு சொந்தமில்லாத அவ்வளவு பணத்தையும் எடுத்து பயன்படுத்த முடியாது. ஆனால் ஒரு நூலகத்தில் உறுப்பினராக உள்ள சாமான்யன், அந்த நூலகத்தில் உள்ள விலைமதிப்பில்லாத புத்தகங்களை முழு அதிகாரத்துடன் எடுத்து சென்று பயன்படுத்த முடியும், அதோடு மட்டும் அல்லாமல் எடுத்துச் சென்ற புத்தகத்தில் இருந்து பெற்ற அறிவை அவனிடமே வைத்துக் கொண்டு புத்தகத்தை மட்டும் திருப்பிக் கொடுக்க அனுமதிக்கப்பட்ட ஒரே இடம் நம் நூலகம். திருப்பிக் கொடுக்கப்பட்ட புத்தகங்கள் மீண்டும் இன்னொருவருக்கு ஞானத்தை வழங்க தயாராகின்றன, ஒரு தீபத்திலிருந்து இன்னொரு தீபத்தை ஏற்றினால் எப்படி ஒளி கொடுத்த தீபத்திற்கு ஒளி குறையாதோ அப்படி தன்னை நாடி வரும் அனைவருக்கும் ஞானத்தை அள்ளி வழங்கும் ஞானலட்சுமியாக விளங்கும் அறிவுத்திருக்கோயில் நம் நூலகங்கள் மட்டுமே. 
வீடுகள், அலுவலகங்கள், கோவில்கள் என அனைத்து இடங்களுமே சாதி, மத, இன, நிற மற்றும் வகுப்பு வாதங்கள் நிறைந்து அலறித்துடிக்க, நம் நூலகங்கள் மட்டும் இவை அனைத்தையும் கடந்து மக்களுக்கு இன்றளவும் அறிவொளியை இலவசமாக வழங்கிக் கொண்டிருக்கிறது. தீரா நோயான அறிவுப் பசிக்கு, இல்லையென்று சொல்லாமல் அனுகும் போதெல்லாம் அறுசுவை அறிவு விருந்தை அளிக்கும் அன்னப்பூரணி தாய் நம் நூலகம். அள்ள அள்ளக் குறையாதோ அட்சயப் பாத்திரங்கள் நம் புத்தகங்கள். எத்தனை உலகப் போர் நடந்தும் கூட தாக்கப்படாத, பாதிக்கப்படாத புத்தகங்களால் கட்டப்பட்ட அரண்மணைகள் நம் நூலகங்கள். “ஒரு நூலகம் திறக்கப்படும் போது நூறு சிறைச்சாலைகள் மூடப்படுகிறது” என்கிறது யாரோ சொன்ன ஒரு நிதர்சனமான பொன்மொழி. அது உண்மை தானே, நல்ல ஒழுக்க நெறிகள், வாழ்வியல் நெறிகள் மற்றும் நீதிகளை இலவசமாக கற்றுக் கொடுக்கும் இடம் ஒன்று இருந்ததால் ஏன் மனிதர்கள் தவறான பாதைகளில் செல்வேண்டி வருகிறது?. நூலகங்களை முழுமையாக பயன்படுத்தினால் சிறைச்சாலைகள் வெறிச்சோடிப் போகும் என்பது தான் உண்மை. ஒவ்வொரு சிறைச்சாலையில் ஒரு நூலகங்களை நிறுவ வேண்டும், அப்படி செய்தால் குற்றவாளியாக உள்ளே செல்லும் ஒருவன் ஞானியாக, ஆசானாக வெளியே வரும் வாய்ப்புகள் மிக அதிகம். 
“ஒரு புத்தகம் விற்கும் போது, நீங்கள் விற்பது 12 அவுன்ஸ் காகிதமும், மையும், கோந்தும் அல்ல – முற்றிலும் புதியதொரு வாழ்கையும் தான் என்கிறார் வெளிநாட்டு அறிஞர். கிரிஸ்டோபர் மோர்லி என்பவர். ஒரு எழுத்தாளன் எழுத்தாளுமை மட்டுமே பெற்றவன் அல்ல, தான் கடந்து வந்த கடினமான பாதைகளையும், சோதனைகளையும் அனுபவத்தையும் உலக மக்களுக்கு வஞ்சனையில்லாமல் எடுத்துரைக்கூடியவனும் ஆவான். தான் உழைத்து சம்பாதித்த பணத்தையோ பெருளையோ எவன் ஒருவனும் வஞ்சையில்லாமல் கொடுத்தது கிடையாது. ஆனால் ஒரு எழுத்தாளன் தன் வாழ்நாளில் பல வருடங்கள் அரும்பாடுபட்டு சம்பாதித்த விலைமதிப்பில்லாத அனுபவங்களை கொட்டிக் கொடுக்கிறான் தன் எழுத்துக்களால், புத்தகம் என்கிற வடிவில் அப்படி ஒரு புத்தகத்தை விற்கும் தொழில் செய்வது கூட இறைவனுக்கு செய்யும் தொண்டுதான், மக்கள் பணி தான், சமூக சேவை தான். இருக்கும் பல தொழில்களில் இருப்திலேயெ லாபம் குறைவான ஏன் நஷ்டம் கூட அடையும் தொழிலாக இருப்பது பதிப்பக தொழிலும், புத்தகம் விற்கும் தொழிலும் தான். ஆனால் அதையும் மீறி மக்களுக்கு சேவை செய்யும் வாழும் மகாத்மாக்கள் இருக்கத்தான் செய்கிறார்கள், ஏனோ நடிகர் நடிகைகளை தவிர வேறு யாரும் நம் கண்னுக்கு தெரிவதில்லை. 
The Library is the temple of learning and learning has liberated more people than all the wars in the history – Carl T. Rowan. ஞானத்தை, கல்வியை கற்றுக் கொடுக்கும் கோவிலாக நூலகம் இருக்கிறது, கற்பதின் மூலமாக எண்ணற்ற பல மனிதர்கள் சுதந்திரம் அடைந்தை போல வரலாற்றில் எந்த போரும் மனிதர்களை சுதந்திரப்படுத்தியதில்லை என்கிறார் மேலை நாட்டு அறிஞர் கார்ல். டி. ரோவன். எவ்வளவு உண்மையான வார்த்தைகள் அவை. இதுவரை மனிதர்கள் நடத்திய போர்கள் தங்கள் நிலப்பரப்பை காப்பாற்றி கொள்வதற்கும், கால்நடைகளையும், தங்கள் உரிமைகளையும் காப்பாற்றிக் கொள்வதற்காகவும் தானே. இதில் தன் சுயநலத்திற்காக பெண்க்கும், பொன்னுக்கும், மண்னுக்கும், அதிகார போதைக்கும், ஆட்சி வெறிக்காகவும் தானே செய்யப்பட்டுள்ளது. ஆனால் ஒரு மனிதன் கற்றல் போர் என்பது தன்னை அறியாமை என்னும் பாழும் இருள் சிறையில் இருந்து சுதந்திரப்படுத்திக்கொள்ளவும், தன்னை சார்ந்தவர்களையும், தான் பிறந்த மண்ணையும் சுதந்திரப்படுத்தும் அல்லவா. இறைவனை காண வேண்டும் என்ற துடிப்பு உங்களுக்கு இருந்தால், நான் சொல்கிறேன் இறைவன் ஞான வடிவாக இருக்கிறான், கற்றல் போர் செய்தால் ஞான வடிவாக இருக்கும் இறைவனை காண முடியும். ஏன் நாம் அனைவரும் கற்றல் போர் புரியக் கூடாது? மாறாக இன்றைக்கு கற்றல் குறைபாடு, வாசித்தலில் கூட குறைபாடு மேலோங்கி இருக்கிறது.
எழுதப்படிக்க தெரியாது ஒரு குடிகாரனுக்கு கூட ஒரு மாவட்டத்தில் எங்கெங்கு சாராயக் கடை உள்ளது என்று தெரியும், ஆனால் மெத்தப் படித்த பட்டதாரிகள் எத்தனை பேருக்கு மாவட்டத்தில் எங்கெங்கு நூலகங்கள் உள்ளது என தெரியும்? 
ஒரு நாள் சாராயக் கடை மூடியிருந்தால் அதற்காக வருத்தப்பட கூடியவர்கள் இருக்கிறார்கள். மூடியிருக்கும் கடை முன் கூட்டம் கூடுகிறார்கள், மேலிடத்தில் புகார் செய்கிறார்கள், கடை ஊழியர் மீது நடவடிக்கை கூட எடுக்கப்படுகிறது. கடை மூடப்பட்ட அன்றயை தினம் குடிகார்களுக்கு ஏற்பட்ட மன உளைச்சல் செய்தியாக வருகிறது. கடை மூடப்பட்ட அன்றயை தினம் ஏற்பட்ட நஷ்டங்கள் கணக்கிடப்படுகிறது. விழாக் காலங்களில் விற்பனை இலக்கு நிர்ணயிக்கப் படுகிறது. கடை மூடப்படும் நேரம் அதிகரிக்க கோரி வேண்டுகோள் வைக்கப்படுகிறது. வருடத்தில் மூன்று நாட்கள் தவிர மற்ற நாட்கள் செயல்படுகிறது. ஆனால் மக்களுக்கு சேவை செய்யும் நூலகம் மூடப்பட்டு கிடந்தால் கேட்க நாதியில்லை. ஊழியர் வந்தாரா இல்லையா என்று தெரியாது? அங்கே எத்தனை செய்தித்தாள்கள் எத்தனை வருகிறது என்று தெரியாது. இப்படி எல்லா கேள்விகளுக்கும் விடை தெரியாது. ஆனால் நம் குழந்தைகள் நன்றாக படித்துவிட வேண்டும். இந்தியா வல்லரசாகிவிட வேண்டும். அரசு வேலை கிடைத்துவிட வேண்டும். இதென்ன கொடுமையான மனநிலை? 
ரோட்டோரத்தில் இருக்கும் தள்ளுவண்டி ஹோட்டல் கடையில் கூட இன்று என்ன ஸ்பெஷல் உணவு என்று எழுதி போட்டிருப்பார்கள். இன்று எத்தனை நூலகங்களில் இன்று எந்த நூல் புதுவரவு என்று எழுதி போட்டுள்ளார்களா? ஆயிரம் ரூபாய் கூட கொடுத்து பாழாய் போன திரைப்படத்தை வந்த முதல் நாளே சென்று பார்க்கும் இன்றைய இளைஞன், லட்ச ரூபாய் ஆனாலும் வந்த அன்றே புதிய காரை வாங்கும் கார் பிரியர்கள், மொபைல் போன் பிரியர்கள், கையில் காசு இல்லையென்றாலும் கடன் வாங்கியாவது குடிக்கும் குடிகாரர்கள், மேக்கப்புக்காகவும், உடைகளுக்காவும் ஆடம்பர செலவு செய்யும் இளைஞர்கள் இன்றளவும் இருக்கிறார்கள். அறுபது ரூபாய் கொடுத்து வருடம் முழுவதும் எண்ணற்ற புத்தகங்களை வீட்டிற்கு எடுத்துச் சென்று படிக்க ஏன் இளைஞர்கள் முன்வரவில்லை? ஏன் ஊடகங்களின் கழுகு கண்ணிற்கு நூலகங்களும், நலிந்த எழுத்தாளர்களும், வாசகர்களும் தெரியவில்லை? 
ஒரு சாராயக் கடையில் எத்தனை லட்ச ரூபாய்க்கு மது வைத்திருந்தாலும் விற்றுத்தீர்ந்த விடுகிறது. குடித்தால் உயிருக்கு ஆபத்து என்று குடிகாரன் நெற்றியை தவிர மற்ற அனைத்து இடங்களிலும் எழதினால் கூட குடிப்பவர்கள் நிறுத்தவதில்லை. ஞானப்பால் கொடுக்கும் நூலகங்களுக்கு ஏன் இப்படிபட்ட ஆதரவு இல்லாமல் போனது? யாரை நம்பி புத்தகம் எழுதிகிறான் பாவப்பட்ட எழுத்தாளன்? இன்றும் குறையாத நம்பிக்கை நம் மீது. மக்கள் நல்ல விடயங்களை படிப்பார்கள் என்ற அதீத நம்பிக்கை. நண்பணின் பிறந்த நாளுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்ற மூன்று வார்த்தைகளை சொல்லாத சோம்பேறிகள் தான் இன்று அதிகம். இவர்களுக்கு நடுவே மக்களுக்காக, மக்களின் நலனுக்காக தன்னுடைய வருடக்கணக்காண அனுபவத்தை லட்சோப லட்சம் வார்த்தைகளால் நமக்கு புரியும் படியாக, நமக்கு உபயோகப்படும் படியாக எழுதும் ஒப்பற்ற எழுத்தாளர்களை அங்கீகரிக்காத இந்த உலகம், புறக்கணிக்கும் இந்த உலகம் எங்கு போய் முடியும்?
குடிகாரன் முழுமையாக சாராயக் கடையை பயன்படுத்துகிறான், விடுமுறை நாட்களில் செல்கிறான், நேரம் கிடைக்கும் போது செல்கிறான், தன் நண்பர்களுக்கு அறிமுகப்படுத்துகிறான், வாங்கி கொடுத்து ருசிக்க வைக்கிறான், கடை மூடப்பட்டு கிடக்கும் போது கள்ள விற்பனையிலாவது வாங்கி குடிக்கிறான், விருந்துகளில் சாராயத்திற்கு முதல் மரியாதை கொடுக்கிறான். வாங்கி கொடுத்து உபசரிப்பதை கவுரவமாக கருதுகிறான். ஆனால் மெத்தப்படித்த நாம் யாருக்காவது ஒரு புத்தகம் வாங்கி கொடுக்கிறோமா? தேடிப் போய் பிடித்த புத்தகத்தை வாங்குகிறோமா? கிடையாது. கடன் வாங்கிய புத்தகத்தை கூட திருப்பிக் கொடுக்காதவர்கள் நாம். 
தமிழகத்தில் எத்தனை டாஸ்மாக் கடைகள் உள்ளது? அவற்றின் இந்த வருட புதுவருட, பொங்கல், தீபாவளீ விற்பனை எவ்வளவு? அரசின் லாபம் எவ்வளவு என்று அக்குவேறு ஆணி வேறாக அலசும் ஊடகங்கள் ஏன் தமிழகத்தில் நூலகங்கள் எத்தனை உள்ளது? எவ்வளவு புத்தகங்கள் உள்ளது? எத்தனை எழுத்தாளர்கள் நலிந்து போய் பஞ்சத்தில் தூக்கில் தொங்கினார்கள் என்று செய்திகளை சொல்வதில்லை? விவசாயி பஞ்சத்தில் சாக வேண்டும், எழுத்தாளன் ஆதங்கத்தில் சாக வேண்டும் என்று தலைவிதியா என்ன? என்று நாம் இந்த அவலங்களை உடைத்தெரியப் போகிறோம்? 
கிராமப்புற நூலகங்கள் கேட்பாரற்று பூட்டிக் கிடைக்கிறது, வைக்க இடமில்லாமல் நூல்கள் என்ன கதி ஆனது என்று தெரியவில்லை? திறந்திருக்கும் கிராமப்புற நூலகங்களுக்கு செய்தித்தாள்கள் இல்லை, மாணவர்களுக்கு நூலக வகுப்பு நடத்தப்படுதில்லை, நூலகம் இல்லாத கல்லூரிகள், பள்ளிகள் ஆடம்பரமாக உள்ளது, இருக்கும் நூலகங்களுக்கு நூலகர்கள் போதிய அளவு இல்லை, ஏன் ஊடகங்கள் இவற்றை கண்கொண்டு காண மறுக்கிறது? ஏன் விவாதிக்க நேரமில்லாமல் போனது?
இரத்த தானம், அன்ன தானம், உடல் உறுப்பு தானம், கண் தானம் போன்றவற்றிற்கு மிகப் பெரிய அளவில் முகாம்கள் நடத்தப்படுவது போல ஏன் நூலக உறுப்பினர் சேர்க்கை முகாம்கள் நடத்தப்படுவது இல்லை? பிரபலங்களின் பிறந்த நாட்களிலில் ஏன் அவர்கள் புத்தகங்களை தானமாக வழங்கக்கூடாது? பற்பசைக்கும், செருப்புக்கும் விளம்பர தூதுவர்களாக பெருமையுடன் வலம் வரும் பிரபலங்கள் ஏன் புத்தக விற்பனையாளர்களுக்காக, புத்தகங்களுக்காக பேசக்கூடாது? பல கோடி ரூபாய்க்கு விற்பனை நடக்கும் புத்தக கண்காட்சிகளில் மற்றும் பொருட்காட்சிகளில் ஏன் நூலக உறுப்பினர் சேர்க்கை கடை ஒன்று திறக்க கூடாது? நலிந்த எழுத்தாளர்களுக்கு தொண்டு நிறுவனங்கள் மற்றும் முன்னனி பதிப்பகங்கள் ஏன் குரல் கொடுத்து உதவ கூடாது??
நூலகங்கள் பிரம்மாண்டமான புத்தக சேமிப்பு கிடங்காக இருக்க கூடாது, மாறாக எழுத்தாளர்களையும், வாசகர்களையும் ஒன்றினைக்கும் அல்லது சங்கமிக்க வைக்கும் இடமாக மாற வேண்டும். நூறு ரூபாய் பணம் கொடுத்து புத்தகம் வாங்க இயலாத ஏழை உரிமையோடு விரும்பிய புத்தகத்தை வீட்டிற்கு எடுத்துச் சென்று படிக்க நூலகங்கள் வழிவகை செய்ய வேண்டும். குறைந்த பட்சம் நூலகத்தில் உறுப்பினர் ஆவதற்கு என்ன வழிமுறைகள் என்றாவது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி விட வேண்டும். கோடாண கோடி புத்தகங்கள் நூலகங்களில் உள்ளன அவற்றை படிக்க வாசகர்கள் இன்று இல்லை. தொலைக்காட்சிகள் வாரந்தோறம் டாப் 10 திரைவிமர்சனம் செய்வது போல டாப் 10 புத்தக விமர்சனம் செய்ய வேண்டும். சிறந்த நூலகங்கள், சிறந்த வாசகர்கள், சிறந்த நூலகர்களுக்கு விருது வழங்க வேண்டும். சிறந்த புத்தகங்கள், சிறந்த எழுத்தாளர்கள். சிற்ந்த வாசகர்களின் நேர்காணல்கள்களை தொலைக்காட்சிகளும், பத்திரிக்கைகளும் கொண்டாட வேண்டும். அப்போது தான் நூலகங்களின் எழுச்சி துவங்கும் என்பதில் சந்தேகம் இல்லை. அதிக அளவில் வாசகர்கள் கிடைப்பார்கள், அதிக படைபாளிகள் அறிமுகப்படுத்தப்படுவார்கள்.
மாணவர்கள் நூலகங்களை எப்படி பயன்படுத்த வேண்டும், நூலகத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும், ஒவ்வொரு மாவட்டத்திலும் எத்தனை நூலகங்கள் எங்கெங்கு உள்ளது, நூலகத்தில் உள்ள வசதிகள் என்னென்ன, புரவலர்கள் என்பார் யார், இதுவரை நூலகங்களால் பயன்பெற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் என்கிற தகவல்கள் மாணவர்களையும் பொதுமக்களையும் சென்றடைய வேண்டும்.
www.facebook.com/noolagadesam
EMail: noolgadesam@gmail.com
நட்புடன்
அ.தீ. ரமேஷ்கார்த்திக்
சமூகப் பணியாளர், தருமபுரி மாவட்டம்
--
Thanks & Regards,
A.T. RameshKarthik D.IT., MSW., PGDCA., MA (Journalish & Mass Com)
Social Worker & FreeLance Journalist
9944290306
https://www.facebook.com/RameshKarthik.Activist
மாவட்ட தலைவர், இந்திய நதிகள் இணைப்பு இயக்கம்

Publisher: Pavithran kalaiselvan - 12:44 AM
, ,

கவிதை. பக்கம்

கற்றவை. கையிலிருக்க
காவியம். வாயிலிருக்க
கொற்றவை.  கோபமிருக்க
கொய்தலை கொய்தலை
என்றிடும் கொய் தொல்லை ஏனோ

அற்றவை யாவும் அறமென கூறும்
அறியாமை நிழலை விளங்கிடும்
விதி யெனும் வெயில் கொண்டு மீள்வேனா

மீள்வதும் மதியாயிருப்பின் அதிலின்றி மாள்வேனா
தண்டனை யாதெனில் தவறில்லா மன்னிப்பு
நின்தனை செய்கையில் நிகரில்லா வெறுப்பு

எத்தினை யுத்தங்கள் கண்டினும் வீரன்
என்னிலை வந்திடின் நொண்டிடும் சூரன

வெற்றிடம் போன்றதாய் வெறிதிட்ட என் மனம்
வெற்றிலை பாக்கில்லா சிவந்திடும் வெறித்தனம்

காற்றிடை பூவாய் பூத்ததோா் பூவை
கற்றாலை தீவாய் வாழ்திடும் பாவை

அணை திங்கள் இணை கரம் வர
துணை மஞ்சள் எனும் பொருள்
தர

இருமனம் இணைந்ததாய் இதும் ஒரு திருமணம்
நறுமனம் நிறைந்ததாய் பேசிடும் பல மனம்

இங்கனம் இக்கனம் இவள் எந்தன் சொப்பனம்
எங்கனம் சென்றினும் இவள்
முகம் நூதனம்

வாடிய நிலவினில் தேடினேன் ஒரு முகம்
கூடிய இருள்தனில் கிடைத்தனா் இருவரும்

ஆத்திரம் கொண்டதால் ஆவேசம் ஆனதால்
சமுத்திர குருதியும் அலைவேகம் ஆதலால்

திண்டினேன் அவளை உயிா்வரை சீண்டினேன்
சுண்டினேன் அவளை
இரண்டாய் துண்டினேன்

தீா்ந்தது கோபம் செய்தது பாவம்

Publisher: Pavithran kalaiselvan - 12:39 AM
, ,

மட்டற்ற மரபணுக்கள்

உயிா்கள் அணைத்தும் அமைப்புடையவை அதன்சாரம் என்னவோ வேறாகலாம் . ஆனால் கட்டுமான உட்கரு ஒன்றுதான் ; அதுவே மரபணு.

மனிதன் மறிக்கலாம் , உயிர்கள் பிரியலாம் மரபணு மறிப்பதில்லை அந்த மரபணுக்களின் சில சங்கதிகளை பற்றிய கட்டுரைதான் இது.

மரபணு என்பது டி.என்.ஏ என்னும் மூலகூறின் ஒரு தொகுப்பமைபே. நம் முன்னோா்கள் சொல்லிய ,ஏன் சமீபத்தில் கூட பலா் பேசி கேட்டிருப்பீா்கள்."எல்லாம் தலையில எழுதினபடி நடக்குதுனு" . அது நம்ம தலையில் இல்ல டி.என்.ஏ வின் இடையில் உள்ள நியூக்ளியோடைடுகளில் இருக்கு விதி.

ேஐம்ஸ் வாட்சன் & ப்ரான்சிஸ் கிரிக் என்ற அறிவியலாளா்கள் தான் இந்த நியூக்ளியோடைடு அமைப்பினை கண்டறிந்து வகைபடுத்தினா்.

லூயிஸ் பாஸ்டா்; "உயிா்கள் ஒரு பரிமாண வளா்ச்சியின்போது வேதிவினைகள் சரிவர நிறைவேறுவதாலே தோன்றுகிறது "என்றாா் இதை அப்சொலூட் (absolute) கொள்கையானது.
இதையே ஆல்பா்ட் ஐன்ஸ்டின் ஏற்றுகொள்ள தகாதது என்றாா்.

நியூக்ளியோடைடு வாிசை என்பது நான்கே எழுத்துக்கள் தான் ; அதன் வாிசை அடிபடையிலேயே உயிா்களும் அதன் குணங்களும் வேறுபடுகின்றன. எப்படி ஏழு ஸ்வரங்களில் இருந்து பல்வேறு ராக தாளங்கள் வந்ததோ அப்படி.  ATCG என்ற நான்கு எழுத்துக்கள்.
A- adinine  அடினைன்
T- timine  தைமைன்
C- cyclocine சைக்ளோசைன்
G- guanine குவானைன்

இப்படி ஒரு கண்டுபிடிப்பில் தான் ெஐனிடிக்ஸ் என்ற ஒரு துறை வளர ஆரம்பித்தது.

ஒரு மரபணு தொகுப்பை ஐீனோம் என்றாா்கள்:-

1- ஐீனோம= 100,000 ஐீன்களை கொண்டது .்

ஒரு மரபுதொடா் சங்கிலியை குறிப்பிட்ட இடத்தில் அறுத்து; அதற்கு பதிலாக வேறோரு மரபு சங்கிலியை சோ்பதில் துவங்கி ,  புதிய உயிரை உருவாக்கும் வரை சென்றுள்ளது.

இப்படி அறுப்பதற்கும் இணைப்பதற்கும் சில நுண்ணுயிரிகள் தேவைபட்டன.

Enzymes ; குறிபிட்ட இடத்தில் அறுக்க

Restriction nucleases ; வெட்டி பிரித்திட

Ligases ; சோ்க்க

இதுக்கு மேல அதனுடைய கணக்கை சொன்ன கூடவே க்ரோசின் மாத்திரையும் அனுப்ப வேண்டிருக்கும் என்பதால் இத்துடன் முடித்து கொள்கிறேன் .

மேலும் அறிந்து கொள்ள விரும்புவோா் , மரபணுக்களும் செயல்பாடுகளும் என்ற புத்தகத்தை படித்து தொிந்து கொள்ளலாம் ஆசிரியா் டி.ஆா். பாலகிருஷ்ணன்.

Publisher: Pavithran kalaiselvan - 12:36 AM
, ,

சாலையில் பூக்கும் பூக்கள்

வேதூா், இந்தியாவின் கிராமிய வளத்திற்கு முத்தாய்பாய் விளங்கும் அளவில் ; இயற்க்கை வளமும்; நீா் வளமும். மனித கலாச்சாரமும் நிறைந்த ஒரு கிராமம்.

தனக்காய் பெரும் அடையாளங்களை கொண்டது சுற்றிலும் மலைகள் அதன் பிளவில் கல்லும் கசிந்துருகுவது போல் மௌனமாய் ஓடும் ஆறுகள், வளா்ந்திருக்கும் கதிா்கள் காற்றிடம் காதல் பேசிட , விவசாயத்தில் திளைத்து கதிரின் மணிகளை உலகிற்களித்த பெயா் பெற்ற கிராமம்.

இப்படி ரம்மியமான கிராமம் இன்று கண்ணீா் சிந்திட முக்கிய காரணம் வேதூா் மாணிக்கம் தான். ஒரு யுக மனிதனின் கனவுலக நாயகன். அப்படி வாழ்ந்தவா் என்றெல்லாம் ஊா் புகழ்பாட, அவா் மட்டும் செவி சாய்க்கவே இல்லை, உண்மையான , கண்ணீா் பெற்ற மனிதராய் நான் சொல்பவா்.

அவருக்கான குணமும் செல்வமும் சொல்லி மாளாது. தலைவா் போல் வாழ்ந்தவா் இருமகன்களையும் தேசத்திற்காக அா்பணித்தவா். கிராமத்தின் கௌரவமாய் வாழ்ந்தவா். அவரது இறுதிசடங்குகள் நடைபெறுகிறதென்றால் யார் தான் நம்புவாா்.?

இறுதியாய் இருந்த  செல்வமனைத்தையும் ஊா் பொது நலனுக்காக வழங்கியவா். ஊா் கண்ணீருடன் அவரது இறுதி ஊா்வலம், ராஐமாியாதையுடன் நல்லடக்கம்செய்து ; அவரை தீயிலிட்டு ஆவியை நெஞ்சில் ஏற்றி வந்தனா்.

சுயநலம் கொண்ட மக்கள் தாா்சாலையாய் நிறைந்திருக்க அந்த தாா்சாலையில் பூக்கும் பூ இவா்.

அதனாலோ தான் அவாின் இறுதிசடங்கில் உதிா்த்த பூக்களும் பெருமிததில் ; சாலையில் பூக்கும் பூக்களாயின.==

Publisher: Pavithran kalaiselvan - 12:35 AM
, ,

என்னிடம் கேளுங்கள்

டியா் வாசகா், இந்த பகுதி கேள்வி பதிலுக்கானது . நீங்கள் உங்களது கேள்விகளை என்னிடம் கேளுங்கள் அதன் பதிலை அடுத்த இதழின் பக்கத்தில் பாருங்கள் .முதல் முறை என்பதால் எங்கள் குழுக்களின் கேள்விக்கு பதில் சொல்லிருக்கிறேன்.

1. விழிப்புண்வூ என்பதின் அவசியம் என்ன ?

விழிப்பு என்பதே அறியாமையின் அருகாமையில் இருப்பவா்களை அறிவின் நிழலில் செலுத்துவது.

2. இன்றைய கூகுள் உலகில் புத்தகம் அவசியமா ? அல்லது அதில் மாற்றங்கள் தேவையா?

புத்தகம் எப்போதும் அவசியம் , தேவையான மாற்றங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன ஈபுக் , வலை நூலகம் போல.

Publisher: Pavithran kalaiselvan - 12:34 AM
, ,

ஓட்டுனருக்கு தெரிந்த விஷயம்; தெரியாத உண்மை...

வாகனங்களை ஓட்டத் தெரிந்த பலர், சாலைகளில் இடம் பெற்றவை குறித்து அறிந்திருப்பதில்லை.

இது குறித்து மதுரை டிரைவிங் நீட்ஸ் அகாடமியின்
பயிற்சியாளர் ஏ.நரசிம்மமணி கூறியதாவது:

* பகலில் முகப்பு விளக்குகளை எரியவிட்டு எதிரே வரும் வாகனத்தை எச்சரித்தபடி முன்னேறுவது குற்றம்.

* சாதாரண நேரங்களில் நான்கு புறங்களிலும் உள்ள எச்சரிக்கை விளக்கை எரிய விடுவது தவறு.

அபாயகரமான அல்லது வாகனம் பழுதாகி நிற்கும்போதோ, பழுதான வாகனத்தை பிற வாகனங்கள் இழுத்துச் செல்லும்போதோ எரியவிட வேண்டும்.

* சிக்னல்கள் அல்லது ரோட்டில் வாகனங்களை நிறுத்தி இருக்கும்போது, அனைத்து விளக்குகளையும் எரியவிடக் கூடாது.

* ரோட்டின் நடுவில் கோடுகளை குறிப்பிட்ட இடைவெளியில் விட்டுவிட்டு போட்டிருந்தால், ஒரு வாகனத்தை நாம் இந்த இடத்தில் முந்திச் செல்லலாம் என்று பொருள்.

அதேசமயம் தொடர்ச்சியான நீண்ட கோடுகளாக
போட்டிருந்தால் முந்தக் கூடாது என்று பொருள்.

* ரோட்டின் நடுவில் தொடர்ச்சியாக இரட்டைக் கோடுகள் போட்டிருந்தால், அதை ஒரு தடுப்புச் சுவராக கருத வேண்டும்.

* ஓட்டுனருக்கு 20.5 மீ (67 அடி) தொலைவில் இருந்து வரும் வாகனத்தின் பதிவு எண்ணை படிக்க முடிந்தால், கண்கள் நல்ல பார்வையுடன் உள்ளது என பொருள்.

எனவே, ஆண்டுக்கு ஒருமுறை ரத்த அழுத்தம், சர்க்கரை, கண்
பரிசோதனை செய்வது நல்லது.

* கனகர வாகனங்களின் பின்புறம் சிவப்பு நிற முக்கோண வடிவச் சின்னம் உள்ளது.

இது முற்றிலும் தவறு.

மோட்டார் வாகன சட்டப்படி, அது ஒரு
எச்சரிக்கை சின்னம்.

ரோட்டில் ஒரு வாகனம் பழுதாகி நின்றாலோ, அவசர
நிலையிலோ அதை வாகனத்தின் பின்புறம் 15 அடி தள்ளிதான் வைக்க வேண்டும்.

* நெடுஞ்சாலையில் எதிரே வரும் வாகனத்திற்கு வசதியாக முகப்பு விளக்குகளை 250 மீ.,க்கு முன்பே "டிம்' செய்ய வேண்டும்.

* வளைவுகளில் அதிவேகமாக ஓட்டிச் சென்றால் விபத்து நடக்கும்.

அதற்கு "இன் ஸ்லோ-அவுட் பாஸ்ட்' என்ற முறையில் செல்ல வேண்டும்.

அதாவது, மைய ஈர்ப்பு விசை, விலக்கு விசைகளின் அடிப்படையில், வளைவுகளில் நுழையும்போது மெதுவாகவும், பின் ஆக்ஸிலேட்டரை லேசாக அழுத்தியும் செல்ல வேண்டும்.

ஆனால் பலர் வேகமாகவே நுழைந்து பிரேக் அடித்து
திரும்புகின்றனர்.

இதனால் வாகனம் கவிழ்ந்துவிடும்.

* கார்களில் செல்வோர் "சீட் பெல்ட்' அணியும்போது

சட்டைப் பையில் போன், பேனா, சில்லரை காசுகள் வைத்திருப்பதை தவிர்க்க வேண்டும்.

பெண்கள் அதிக நகை அணிந்திருக்கக் கூடாது.

அசம்பாவிதம் நேரிட்டால் அந்த பொருட்களே பயணிக்கு எமனாக மாறிவிடும்.

* நான்கு வழிச் சாலையின் நடுவே மீடியனில் அரளி செடிகளையே வைத்துள்ளனர்.

காரணம் எதிரே வரும் வாகனத்தின் முகப்பு விளக்கு ஒளியில்
இருந்து கண்களை பாதுகாக்கும்.

வறட்சியையும் தாங்கும் இச்செடிகளின்
வேர்கள் அதிகம் வெளி வராது.

இது வாகனங்களின் கார்பன் டை ஆக்சைடை
அதிகம் "அப்சர்வ்' செய்கிறது.

விலங்குகளும் இவற்றை உண்பதில்லை.

* நமக்கு அவசர அழைப்பு எண் 108 என்பது தெரியும். மற்றுமொரு எண் 112 என்பது பலருக்கு தெரியாது.

மொபைல் போன் "சிக்னல்' இல்லாத
இடங்களிலும், மொபைலின் "கீ லாக்' செய்யப்பட்ட நிலையிலும், ஏன் "சிம்கார்டு' இல்லாத நிலையிலும்கூட இந்த எண்ணை அவசர உதவிக்கு பயன்படுத்தலாம்.

மொத்தத்தில்விவேகமான வேகமே விபத்துக்களில் இருந்து பாதுகாப்பு

இந்த நல்ல விஷயத்தை பலருடன் பகிரலாமே!!!!

Publisher: Pavithran kalaiselvan - 12:28 AM