Showing posts with label prabha. Show all posts
Showing posts with label prabha. Show all posts

Saturday, January 17, 2015

,

காதல்

ஆண்களின் காதலை விட பெண்களின் காதல்எப்பவும் அழகோ அழகு தான்...நம் கைகோர்த்து நடக்கநம் மடிசாய்ந்து உறங்கநம் தோல் சாய்ந்து அமரநம் நெஞ்சினில் சாய்ந்து கொள்ளநம்மோடு மனம் திறந்து பேசநம் நெஞ்சினில் இருக்கும் முடியைஇழுத்து விளையாடஇப்படி கணக்கில்லா ஆசைகள் இருந்தும்நாம் அருகில் இருக்கும் போது யாதும் அறியாதவளாய் அடக்கமாய் அமர்ந்துநம்மை இம்சிக்கும் போதுபெண்களின் காதல் அழகோ அழகு தான்...!விரட்டி விரட்டி காதலிக்கும் போதுஒரு வார்த்தை பேசமாட்டாளஎன்று ஏங்கிய நம்மைபேசி பேசியே கொள்ளும் போது பெண்களின் காதல் அழகோ அழகுதான்...!தங்கம்,மா,செல்லம்,அம்முகுட்டி,என்று நாம் கொஞ்சும் போது அவள்மௌனமாக சிரிக்கும் போதும்பெண்களின் காதல் அழகு தான்...!காய்ச்சல் என்று சிறிய பொய் சொன்னாலும் கூட உடனே நம்பிகண்ணீர் சிந்தி நம்மைகாதல் மழையில் நனைய வைக்கும் போதும்பெண்களின் காதல் அழகோ அழகு தான்...!ஆயிரம் முத்தங்கள் அலைபேசியில்கொடுத்துவிட்டுநேரில் ஒரு முத்தத்திற்கு நம்மை தவிக்கவிடும் போதும் பெண்களின் காதல் அழகோ அழகு தான்...!யாரேனும் நம்மை தவறாக பேசும் போதுஅங்கே பேசாமல் இருந்துவிட்டு வீட்டிற்க்குவந்ததும் நம்மை திட்டி தீர்க்கும் போதுபெண்களின் காதல் அழகோ அழகு தான்...?யார்கூடவும் பகிர்ந்து கொள்ளமுடியாதவிசயங்களை நம்மோடு பகிர்ந்து வெட்கப்படும் போது பெண்களின் காதல் அழகோ அழகு தான்...!நாம் முதல் முறை காதலை சொல்லும் போதுமுறைத்து பார்த்துவிட்டுபின்னர் நம்மை காதல் கண்கள் கொண்டுதாக்கும் போது பெண்களின் காதல் அழகோ அழகு தான்...!நம்மோடு வெளியே வரும் போது யாரும் பார்க்காத போதும் நம்மை யாரோ பார்த்து விடுவார்களோ என்று நம்மையும் சேர்த்து பயமுறுத்தும் போதுபெண்களின் காதல் அழகோ அழகு தான்...!வெண்ணிலா ஐஸ் கிரீம்டைரி மில்க் சாக்லேட்மாசா கூல்ட்ரிங்க்ஸ்இதுவே அதிகம் பிடிக்குமெனநம் செலவை சிக்கனம்செய்யும் போது பெண்களின் காதல் அழகோ அழகு தான்...!எதுவும் வேணுமா என்று கேட்டாலும்நீ கேட்டதே சந்தோஷமா இருக்கு என்றுநம்மளையே அசத்தவைக்கும் போதுபெண்களில் காதல் அழகோ அழகு தான்...!நம்மோடு பகிர்ந்து கொள்ள முடியாதஆசைகளை படுக்கை அறையில் தனியாக தலையனையோடு பகிர்ந்து கொள்ளும் போதுபெண்களின் காதல் அழகோ அழகு தான்...!ஆயிரம் உறவுகளை காதலுக்காய்தூக்கி எரியும் போதும்உறவுக்காய் காதலை தூக்கி எரியும் போதும் பெண்களின் காதல் அழகோ அழகு தான்...!இரண்டில் எது நடந்தாலும்அதிகம் பதிக்க படுவது பெண்கள் தான்...!ஆண்களின் காதல் தோல்வியைகாட்டிகொடுக்கும் தாடியும் பீடியும்...!ஆனால் பெண்களின்காதலும் சரி காதல் தோல்வியும் சரியாருக்குமே தெரியாதுஅவர்களுக்கு மட்டுமே அனுபவிக்கும் வலிவாழ்க்கை முழுவதும்...!சுதந்திரமான இந்த உலகில் சுதந்திரமற்ற பறவைகள் பெண்கள் தான்இந்த காதல் வானில் சிறகொடிந்தபறவைகளே அதிகம்...அதிலும்ஆண் பறவைகளை விட பெண் பறவைகளே அதிகம்...!மனதார விரும்பிமனதை கொடுத்தது ஒருவனோடு...மனமில்லாமல் போவது ஒருவனோடு....காதலன் ஒருவன்கணவன் ஒருவன்நரக வாழ்க்கைபெண்களின் காதலைஒருபோதும் ஒப்பிடமுடியாதுஆண்களின் காதலோடு...!!!என்றுமே ஆண்களின் காதலை விட பெண்களின்காதலில் தான் அழகும் வலியும் அதிகம்...

Publisher: Pavithran kalaiselvan - 9:41 PM

Sunday, January 4, 2015

,

நான்கு மெழுகுவர்த்திகள

நான்கு மெழுகுவர்த்திகள் எரிந்து கொண்டு இருந்தன. மெலிதாய்காற்று வீசிக்கொண்டு இருந்தது....காற்றை கண்டதும்‘ அமைதி ‘ என்ற முதல் மெழுகுவர்த்தி ‘ ஐயோ காற்று வீசுகின்றது,நான் அணைந்துவிடுவேன்என்று பலவீனமாக சொன்னது. காற்று பட்டதும் அணைந்துவிட்டது.‘அன்பு ‘ என்ற அடுத்த மெழுகுவர்த்தியும் காற்றை எதிர்க்க முடியாது’என்று அணைந்துவிட்டது.அறிவு ‘ என்ற மூன்றாவது மெழுகுவர்த்தியும்காற்றை எதிர்க்க முடியாமல்அணைந்தது.நான்காவது மெழுகுவர்த்தி மட்டும் காற்று வீசியசில நொடிகள் போராடி ஜெயித்துவிட்டது. அப்போது அந்த அறையில் ஒரு சிறுவன் நுழைந்தான்.‘அடடா மூன்று மெழுகுவர்த்திகளும் அணைந்துவிட்டதே என்று கவலையுடன் சொன்னான்.அதற்கு எரிந்துகொண்டு இருந்த நான்காவது மெழுகுவர்த்தி சொன்னது,வருத்தப்படாதே நான் இருக்கின்றேன். என்னை வைத்து மற்றமூன்றையும் பற்ற வைத்துகொள்’ என்றது.சிறுவன் உடனே..‘நான்காவது மெழுகுவர்த்தியைபார்த்து ” உன்பெயர் என்ன ?”என்று கேட்டான் .'நம்பிக்கை' என்றது மெழுகுவர்த்தி.நாம் எப்பொதும் வாழ்வில் நம்பிக்கையை மட்டும்இழக்கக் கூடாது.......

Publisher: Pavithran kalaiselvan - 11:11 PM