Showing posts with label magazinerel2. Show all posts
Showing posts with label magazinerel2. Show all posts

Friday, December 19, 2014

,

மக்கிப்போக தேவைபடும் காலம்

நாம் பயன்படுத்தும் சில தினசரி பொருட்களின் மக்கிப்போக தேவைபடும் காலம் எவ்வளவு என்று பாா்ப்போம்.

காகிதத்துண்டு - 2-4 வாரம்

வாழைப்பழ தோல் - 3-4 வாரம்

காகிதப்பை - 1 மாதம்

செய்தித்தாள் - 1.5 மாதம்

ஆப்பிள் உட்பழம் _- 2 மாதம்

ஹாா்ட்போா்டு அட்டை - 2 மாதம்

பருத்தி கைஉரை(காட்டன் க்ளவுஸ்) - 3 மாதம்

ஆரஞ்சு தோல் - 6 மாதம்

ப்ளைவுட் - 1-3 வருடம்

கம்பளி - 1-5 வருடம்

பால் ஆடை - 5 வருடம்

சிகரெட் பஞ்சு - 10-12 வருடம்

தோல் காலணிகள் - 25-40 வருடம்

தகர கேன் - 50 வருடம்

நுரைத்த ப்ளாஸ்டிக் கப் - 50 வருடம்

அலுமினிய கேன் - 200-500 வருடம்

ப்ளாஸ்டிக் பெட்டிகள் - 50-80 வருடம்

ரப்பா் பாலிமா்கள் - 50-80 வருடம்

ப்ளாஸ்டிக் பாட்டில்கள் - 450 வருடம்

டையப்பா்கள் - 550 வருடம்

ஒரு இழை கொண்ட மீன் வலை - 600 வருடம்

ப்ளாஸ்டிக் பைகள் - 200-1000 வருடம்

Publisher: Pavithran kalaiselvan - 9:22 PM
,

தாடியின் பலன்கள்

சரும புற்றுநோயைத் தடுக்கும் சமீபத்திய
ஆய்வின்படி,
சூரியனிலிருந்து வரும் 95 சதவீத புறஊதாக்
கதிர்கள் நம்
சருமத்தை நேரடியாகத் தாக்காதவாறு நம்
தாடி பாதுகாக்கிறதாம். இதனால்
தான் தாடி வைத்திருக்கும்
ஆண்களுக்கு சரும புற்றுநோயின் தாக்கம்
குறைவாக உள்ளதாம்.
ஆஸ்துமா, அலர்ஜிக்கு தூசி உள்ளிட்ட பல
அலர்ஜிகளைத் தடுப்பதில் அல்லது ஃபில்ட்டர்
செய்வதில் தாடியின்
பங்கு முக்கியமானதாக உள்ளது.
இதனால் ஆஸ்துமாவையும்
தவிர்க்கமுடிகிறதாம்!
இளமையாக இருக்க..
தாடி வளர்த்திருப்பதால், சூரியனின்
தாக்கம் மிக குறைவாக இருப்பதால்,
தாடி இல்லாதவர்களை நீண்ட
ஆண்டுகளுக்கு இளமை தோற்றத்துடனே இருக்க
தாடி. தோற்றத்தை வேண்டும்
கொடுக்கலாம்; ஆனால்,
உண்மையில் தாடி வைத்திருப்பவர்கள்
இளந்தாரிகள்.
குளிரைத் தாங்க…
தாடி வைத்திருப்பதால் குளிரை அதிகம்
தாங்கிக் கொள்ள முடியுமாம்.
எவ்வளவுக்கு எவ்வளவு தாடி உள்ளதோ, அந்த
அளவுக்கு அது குளிருக்கு இதமா இருக்குமாம்.
நோய்த் தொற்றுக்கள் குறைய…
பாக்டீரியா உள்ளிட்ட நோய்த்
தொற்றுக்களைக்
குறைப்பதற்கு தாடி மிகவும் உபயோகமாக
இருக்கிறது.
சுத்தமாக ஷேவ் செய்திருப்பவர்களை இந்த
நோய்த் தொற்றுக்கள் எளிதாகத்
தொற்றிக் கொள்ளுமாம்.
குறைகளில்லா சருமத்திற்கு…
ஷேவிங்கின் போது ஏற்படும் வெட்டுக்
காயங்கள், பருக்கள்
உள்ளிட்ட சருமக் குறைபாடுகள்
தாடி வைத்திருப்பவர்களுக்குக் கிடையாது.
அவை இருந்தாலும்
தாடிக்குள் ஒளிந்து தான் கிடக்கும்!
இயற்கையான ஈரப்பதத்திற்கு…
தாடி வைத்திருப்பதால் உலர்ந்த சருமம் என்ற
பேச்சுக்கே இடமில்லை. அது குளிர்ந்த
காற்றையே எப்போதும் தக்க
வைத்துக் கொண்டிருப்பதால், சருமம்
பாதுகாக்கப்படுகிறது.

Publisher: Pavithran kalaiselvan - 9:06 PM
,

நெட்ல பேசிகிறாங்க

இந்தியா மூன்று பக்கம் ஊழலாலும்,
ஒரு பக்கம் கடனாலும் சூழப்பட்ட
நாடு...

தோசை கல்லு உள்ளே இருந்தால்
உயர்தர ஹோட்டல்..
வெளியே இருந்தால்
சாதா ஹோட்டல்..

வாக்கிங்
போறது எளிதானது தான்...
வாக்கிங் போக
எந்திரிக்கிறது தான்
கஸ்டமானது..

உலகத்துலயே ஸ்பீட் பிரேக்
ஓரத்துல
ஒரு பாதையை உருவாக்கி அதுல
வண்டி ஓட்டுற டெக்னிக் நம்மள
தவிர யாருக்கும் வராது..

கீழே விழுந்ததும்
அடிபடவில்லை என்பதை விட,
யாரும்
பார்க்கவில்லை என்பதே நிம்மதி..

மதம் மாறினால் தான் கடவுள்
ஆசீர்வதிப்பார் என்றால்
உண்மையில் அவர் கடவுள்
இல்லை, கட்சித் தலைவர்..

ப்யூட்டி பார்லர் போன
மறுநாளே ஐஸ்வர்யா ராய் போல
ஃபீல் பன்னுவாங்க பெண்கள்..
ஜிம்முக்கு போன
அன்னிக்கே அர்னால்டு போல ஃபீல்
பன்னுவாங்க ஆண்கள்..

இந்த ஜெனரேஷன்ல
ஆல்கஹாலுக்கு அடிமையானவன
விட ஆன்ட்ராய்டுக்கு
அடிமையானவன்தான் ஜாஸ்த்தி.

பால்விலை கூடுனது கூட
கவலயா தெரில...டீக்கடைல டீ
விலைய எப்ப கூட்ட
போறாங்கேனுதான் திக்
திக்குனு இருக்கு ...
# டெய்லி நாலு டீ குடிப்போர்
சங்கம

ஃபேஸ்புக் டுவிட்டர் பக்கமெல்லாம்
வராதவர்கள் தன் வாழ்க்கையில் முன்னேறிக்
கொண்டிருக்கிறார்கள்
என்று அர்த்தம

இப்பெல்லாம் ஏ.டி.எம்-இல் பணம்
எடுத்தவுடன் பணத்தை எண்ணுவதற்கு முன்பு,
இது எத்தனையாவது முறை பணம் எடுக்கிறோம்
என்று தான் எண்ணுகிறோம

ATM - Anju Time Mattum
(அஞ்சு டைம் மட்டும்)

குழந்தைங்க நம்மகிட்ட
கதை கேட்டதெல்லாம் அந்தக்காலம்..
இப்பல்லாம், 'ஏன் ஹோம்வொர்க்
செய்யல?'னு கேட்டா அதுங்களே கதைகதையா சொல்லுதுங்க..

கிணத்த
தூர்வாருவோம்னு கெளம்புனாங்கெ!!
இப்ப
கெணத்தகாணோம்னு சொல்றாங்கெ!!
இவனுகளே மண்ண
போட்டு மெத்திருப்பானுகளோ!!
# 300பேரின் சுவிஸ் பணம் மாயம்!!

காய்கறி விலை மளமளவென
உயர்ந்துவரும் நிலையில்,
கீரை விலை ஏறாமல் சில்லறயில்
கிடைப்பது, நம் உடல்
ஆரோக்கியத்துக்க
ு கொடுக்கப்பட்டிருக்கும்
கடைசி வாய்ப்பு..

ஆபிஸ் போற அன்னைக்குலாம் 9
மணி வரைக்கும் தூக்கம் வரும்
சண்டே மட்டும் ஏழு மணிக்கு மேல
வராது # விதி

பியூட்டி பார்லர்க்கும்
ஃபுல்லா மேக்அப் போட்டு தான்
போகனுமா?
என்னம்மா இப்படி பண்றிங்களேமா

தூய்மை இந்தியாதிட்டம்!!
தேவையான பொருட்கள்:
வெளக்கமாறு 1
கேமரா 4

மின்கட்டணத்தை உயர்த்தக்கூடாது
என சென்னை உயர்நீதிமன்றம்
உத்தரவு
# அப்டியே நெட் கட்டணத்தயும்
உயர்த்தகூடாதுன்
னு உத்தரவு போட்ருங்கயா

Publisher: Pavithran kalaiselvan - 9:01 PM
,

ஆத்திசூடியை உலகறியச் செய்வோம்..!

1. அறம் செய விரும்பு / 1. Learn to love virtue.
2. ஆறுவது சினம் / 2. Control anger.
3. இயல்வது கரவேல் / 3. Don't forget Charity.
4. ஈவது விலக்கேல் / 4. Don't prevent philanthropy.
5. உடையது விளம்பேல் / 5. Don't betray confidence.
6. ஊக்கமது கைவிடேல் / 6. Don't forsake motivation.
7. எண் எழுத்து இகழேல் / 7. Don't despise learning.
8. ஏற்பது இகழ்ச்சி / 8. Don't freeload.
9. ஐயம் இட்டு உண் / 9. Feed the hungry and then feast.
10. ஒப்புரவு ஒழுகு / 10. Emulate the great.
11. ஓதுவது ஒழியேல் / 11. Discern the good and learn.
12. ஒளவியம் பேசேல் / 12. Speak no envy.
13. அகம் சுருக்கேல் / 13. Don't shortchange.
14. கண்டொன்று சொல்லேல் / 14. Don't flip-flop.
15. ஙப் போல் வளை / 15. Bend to befriend.
16. சனி நீராடு / 16. Shower regularly.
17. ஞயம்பட உரை / 17. Sweeten your speech.
18. இடம்பட வீடு எடேல் / 18. Judiciously space your home.
19. இணக்கம் அறிந்து இணங்கு / 19. Befriend the best.
20. தந்தை தாய்ப் பேண் / 20. Protect your parents.
21. நன்றி மறவேல் / 21. Don't forget gratitude.
22. பருவத்தே பயிர் செய் / 22. Husbandry has its season.
23. மண் பறித்து உண்ணேல் / 23. Don't land-grab.
24. இயல்பு அலாதன செய்யேல் / 24. Desist demeaning deeds.
25. அரவம் ஆட்டேல் / 25. Don't play with snakes.
26. இலவம் பஞ்சில் துயில் / 26. Cotton bed better for comfort.
27. வஞ்சகம் பேசேல் / 27. Don't sugar-coat words.
28. அழகு அலாதன செய்யேல் / 28. Detest the disorderly.
29. இளமையில் கல் / 29. Learn when young.
30. அரனை மறவேல் / 30. Cherish charity.
31. அனந்தல் ஆடேல் / 31. Over sleeping is obnoxious.
32. கடிவது மற / 32. Constant anger is corrosive.
33. காப்பது விரதம் / 33. Saving lives superior to fasting.
34. கிழமைப்பட வாழ் / 34. Make wealth beneficial.
35. கீழ்மை அகற்று / 35. Distance from the wicked.
36. குணமது கைவிடேல் / 36. Keep all that are useful.
37. கூடிப் பிரியேல் / 37. Don't forsake friends.
38. கெடுப்பது ஒழி / 38. Abandon animosity.
39. கேள்வி முயல் / 39. Learn from the learned.
40. கைவினை கரவேல் / 40. Don't hide knowledge.
41. கொள்ளை விரும்பேல் / 41. Don't swindle.
42. கோதாட்டு ஒழி / 42. Ban all illegal games.
43. கெளவை அகற்று / 43. Don't vilify.
44. சக்கர நெறி நில் / 44. Honor your Lands Constitution.
45. சான்றோர் இனத்து இரு / 45. Associate with the noble.
46. சித்திரம் பேசேல் / 46. Stop being paradoxical.
47. சீர்மை மறவேல் / 47. Remember to be righteous.
48. சுளிக்கச் சொல்லேல் / 48. Don't hurt others feelings.
49. சூது விரும்பேல் / 49. Don't gamble.
50. செய்வன திருந்தச் செய் / 50. Action with perfection.
51. சேரிடம் அறிந்து சேர் / 51. Seek out good friends.
52. சையெனத் திரியேல் / 52. Avoid being insulted.
53. சொற் சோர்வு படேல் / 53. Don't show fatigue in conversation.
54. சோம்பித் திரியேல் / 54. Don't be a lazybones.
55. தக்கோன் எனத் திரி / 55. Be trustworthy.
56. தானமது விரும்பு / 56. Be kind to the unfortunate.
57. திருமாலுக்கு அடிமை செய் / 57. Serve the protector.
58. தீவினை அகற்று / 58. Don't sin.
59. துன்பத்திற்கு இடம் கொடேல் / 59. Don't attract suffering.
60. தூக்கி வினை செய் / 60. Deliberate every action.
61. தெய்வம் இகழேல் / 61. Don't defame the divine.
62. தேசத்தோடு ஒட்டி வாழ் / 62. Live in unison with your countrymen.
63. தையல் சொல் கேளேல் / 63. Don't listen to the designing.
64. தொன்மை மறவேல் / 64. Don't forget your past glory.
65. தோற்பன தொடரேல் / 65. Don't compete if sure of defeat.
66. நன்மை கடைப்பிடி / 66. Adhere to the beneficial.
67. நாடு ஒப்பன செய் / 67. Do nationally agreeables.
68. நிலையில் பிரியேல் / 68. Don't depart from good standing.
69. நீர் விளையாடேல் / 69. Don't jump into a watery grave.
70. நுண்மை நுகரேல் / 70. Don't over snack.
71. நூல் பல கல் / 71. Read variety of materials.
72. நெற்பயிர் விளைவு செய் / 72. Grow your own staple.
73. நேர்பட ஒழுகு / 73. Exhibit good manners always.
74. நைவினை நணுகேல் / 74. Don't involve in destruction.
75. நொய்ய உரையேல் / 75. Don't dabble in sleaze.
76. நோய்க்கு இடம் கொடேல் / 76. Avoid unhealthy lifestyle.
77. பழிப்பன பகரேல் / 77. Speak no vulgarity.
78. பாம்பொடு பழகேல் / 78. Keep away from the vicious.
79. பிழைபடச் சொல்லேல் / 79. Watch out for self incrimination.
80. பீடு பெற நில் / 80. Follow path of honor.
81. புகழ்ந்தாரைப் போற்றி வாழ் / 81. Protect your benefactor.
82. பூமி திருத்தி உண் / 82. Cultivate the land and feed.
83. பெரியாரைத் துணைக் கொள் / 83. Seek help from the old and wise.
84. பேதைமை அகற்று / 84. Eradicate ignorance.
85. பையலோடு இணங்கேல் / 85. Don't comply with idiots.
86. பொருள்தனைப் போற்றி வாழ் / 86. Protect and enhance your wealth.
87. போர்த் தொழில் புரியேல் / 87. Don't encourage war.
88. மனம் தடுமாறேல் / 88. Don't vacillate.
89. மாற்றானுக்கு இடம் கொடேல் / 89. Don't accommodate your enemy.
90. மிகைபடச் சொல்லேல் / 90. Don't over dramatize.
91. மீதூண் விரும்பேல் / 91. Don't be a glutton.
92. முனைமுகத்து நில்லேல் / 92. Don't join an unjust fight.
93. மூர்க்கரோடு இணங்கேல் / 93. Don't agree with the stubborn.
94. மெல்லி நல்லாள் தோள்சேர் / 94. Stick with your exemplary wife.
95. மேன்மக்கள் சொல் கேள் / 95. Listen to men of quality.
96. மை விழியார் மனை அகல் / 96. Dissociate from the jealous.
97. மொழிவது அற மொழி / 97. Speak with clarity.
98. மோகத்தை முனி / 98. Hate any desire for lust.
99. வல்லமை பேசேல் / 99. Don't self praise.
100. வாது முற்கூறேல் / 100. Don't gossip or spread rumor.
101. வித்தை விரும்பு / 101. Long to learn.
102. வீடு பெற நில் / 102. Work for a peaceful life.
103. உத்தமனாய் இரு / 103. Lead exemplary life.
104. ஊருடன் கூடி வாழ் / 104. Live amicably.
105. வெட்டெனப் பேசேல் / 105. Don't be harsh with words and deeds.
106. வேண்டி வினை செயேல் / 106. Don't premeditate harm.
107. வைகறைத் துயில் எழு / 107. Be an early-riser.
108. ஒன்னாரைத் தேறேல் / 108. Never join your enemy.
109. ஓரம் சொல்லேல் / 109. Be impartial in judgement.

- ஔவையார்.

Publisher: Pavithran kalaiselvan - 8:51 PM
,

வருங்கால தமிழகமும், மீத்தேன் கிணறுகளும்:

வருங்கால தமிழகமும், மீத்தேன் கிணறுகளும்:
- அதிர்ச்சி அடையாமல் படிக்கவும்
இது ஒரு உண்மை ஸ்டேட்டஸ்...
மீத்தேன் என்னும் எமன்
இன்று காலை தஞ்சையில்
காவேரி பாசன
பகுதிகளை பாலைவனமாய் மாற்ற
கூடிய மீத்தேன்
எடுப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு பொதுப்பணித்துறை
மூத்த பொறியாளர் சங்கம் நடத்திய
கருத்தரங்கத்திற்கு செல்லும்
வாய்ப்பு கிட்டியது..ஏற்க
னவே இது பற்றி அறிந்திருந்தாலும்
மேலும் அது பற்றிய விளக்கங்கள்
தெளிவாய் அறிய
வேண்டி கலந்துகொண்டேன்.
ஒரு வரியில் சொல்ல கூடிய தகவல்
அல்ல இது...அனைவரையும்
அதாவது ஒட்டுமொத்த
தமிழகத்தையும் அழிக்க கூடிய
கொடிய அரக்கன்
இது எனபது அறிந்து பெரும்
அதிர்ச்சியே ஏற்பட்டது.
அனைத்து நட்புகளுக்கும் நான்
வைக்கும்
வேண்டுகோள் ....பொறுமையாய்
படித்து அறிந்து இதை முடிந்த
அளவுக்கு பகிருங்கள் என்பதே.
முற்றிலும் பாலைவனமாய்
மாறப்போகும் தமிழகத்தின்
நெற்களஞ்சியமாம் தஞ்சை மாவட்டம்
என்றும்
அதோடு சேர்ந்து பாதிக்கபடப்போகு
ம் மாவட்டங்கள்
திருவாரூர் ,நாகை மாவட்டம் ஆகிய
இரண்டும் தான் என்பதே நான்
இது வரை அறிந்த
விபரம்...உண்மை அதுவல்ல
என்பதை பல தகவல்களோடும் ,
நடந்த உண்மைகளோடும்
ஒப்பிட்டு இன்று நடந்த
கருத்தரங்கில் பொறியாளர்கள்
கூறியது மனதை பதைபதைக்க
வைத்தது.
சில நாட்கள் முன் புதிதாய்
வெளிவந்த
கத்தி படத்தை ஒரு நண்பர்
குடும்பத்துடன் சேர்ந்து பார்க்கும்
வாய்ப்பு கிட்டியது..அப்படத்தில்
ஒரு இடத்தில கதாநாயகன்
தஞ்சை மாவட்டத்தில்
ஆழ்துளை கிணறு மூலம் மீத்தேன்
எடுக்க போகிறார்கள்
என்று கூறியதும் நண்பரின்
மனைவி என்னிடம் கேட்ட
கேள்வி மீத்தேன் எடுப்பது என்றால்
என்ன , எங்கே என்ற விபரம்
தான்.சற்றே அதிர்ச்சியோடு அவரை நோக்கி விபரம்
கூறினேன்..அதிர்ச்சிக்கு காரணம்
எங்கே மீத்தேன் எடுக்க
போகிறார்களோ அதற்கு வெகு அருகில்
அவர் பிறந்த மண் ...மீத்தேன் எடுக்க
போகும் விபரம்
இங்கு இருப்போற்க்கே சரிவர
தெரியாத
ஒரு செய்தி என்பதே உண்மை..இதே கருத்தை இன்றைய
கருத்தரங்கிலும் பகிர்ந்தனர்.
இன்னும் அதிக அளவில்
இது மக்களை அடைய
வேண்டும்...எதிர்ப்பு வலுக்க
வேண்டும் என்றும் தெரிவித்தனர்..
எங்கேயோ போடப்போகும்
ஆழ்துளை கிணறுதானே நமக்கு என்ன
வந்தது என்று எண்ண வேண்டாம்
தோழமைகளே..
1.நிலத்தடியில் சுமார் 6000
அடி ஆழத்தில்
நிலக்கரியோடு இருக்கும்
மீத்தேனை எடுக்க
நிலக்கரி இருக்கும் மட்டம்
வரை நிலக்கரிப் படிவத்தில்
இருக்கும் நீரை இறைக்கவேண்டும்.
2.கடும் உப்பும், பிற மாசுகளும்
நிறைந்த இந்த நீர், நிலத்தில் வாழும்
தாவர உயிரியல் மற்றும்
நுண்ணுயிர்களைக் கொல்லும்
ஆற்றல் வாய்ந்தது.
3.அதோடு நிலம் சுடுகாடாய்
மாறும்.
4.கடல் நீர் உள் நுழையும்.
5.நிலம் சுமார் 20
அடிகளுக்கு உள்வாங்கும்.
6.கட்டிடங்கள், பாலங்கள்,
ஆற்றுக்கரைகள் , கோயில்கள்
சிதையும்.நிலநடுக்கங்கள்
ஏற்படும் .
7.குடிநீர் , பாசன நீர் தரும்
நிலத்தடி நீர்பிடிப்புகள் வற்றிப்
போகும்.
8.மீதம் இருக்கின்ற நீர்நிலைகளிலும்
ஆழ்துளை குழாய் இட
பயன்படுத்திய ரசாயனங்கள்,
மீத்தேன் ஆகியவை கலக்கும்.
இச்செயல் முறை மண்ணையும்,
நீரையும் நஞ்சாக்கி நிரந்தரமாக
நாசம் செய்யும்.
ஒப்பந்தம் போட்டிருக்கும்
ஜி.இ.இ.சி கம்பெனிக்கு கொடுக்கபோகும்
இடம் 691 சதுர
கிலோமீட்டர் .ஆனால்
பாதிப்பு ஏற்படபோகும்
மூன்று மாவட்டங்களின்
பரப்பளவு 8270 சதுரகிலோமீட்டர்
அதாவது 21 லட்சம் ஏக்கர்
நிலங்களை நாசம் செய்யும்.
மொத்த ஆழ்துளை கிணறுகளின்
எண்ணிக்கை 2000.
அடுத்த கட்டமாய் பாதிக்கபோகும்
மாவட்டங்கள் புதுக்கோட்டை,
திருச்சி மற்றும் கடலூரும் தான்.
இதனால் காற்றும் மாசுபட
போவதால் அது ஒட்டுமொத்த
தமிழகத்தையும் பாதிக்கபோகும்
கொடிய அரக்கன் என்பதே நிதர்சனம்.
ஒட்டுமொத்தமாக
இப்பகுதி பாலைவனமாய் மாற
போவதால் 50 லட்சம் மக்களின்
வாழ்க்கை கேள்விக்குறியாய்
நிற்கிறது..சென்ற
அரசு ஒப்பந்தத்தில்
கையெழுத்து இட்டு தற்போது ஆங்காங்கே நடைபெறும்
போராட்டம் காரணமாய் இந்த
அரசு தற்காலிகமாய்
நிறுத்தி வைத்துள்ளது.ஜனவரி 30,
2015 அன்று முடிய போகும் இந்த
ஒப்பந்தம் மட்டும் மீண்டும்
தொடர்ந்தால் ...............
தமிழகத்தை யாராலும் காப்பாற்ற
இயலாது.. இது உண்மையே....

Publisher: Pavithran kalaiselvan - 8:19 PM
,

மாற்றம் தேவை உரை1

உலகத்தை படைத்த கடவுளுக்கு பல லட்சங்களையும்
கோடிகளையும்
செலவழித்து கட்டுகிறோம் வீடு கோவில்களாக,
ஆனால் தெருவில் வாழும்
மக்களுக்கு உதவ யாருமில்லை. எல்லாம்
உள்ள இறைவனுக்கு ஏன்
நண்பர்களே காணிக்கை அதுக்கு பதிலாக
இல்லாதவங்களுக்கு உதவலாமே.
கோவில்களுக்கு கொடுக்காம
இருந்தா நல்லது நடக்காதா என்ன,
அப்படி கெட்டது நடந்தா அந்த
சுயநலமான கடவுள்
நமக்கு எதற்கு நண்பர்களே. ஆனால் நாம
இல்லாதவங்களுக்கு உதவினால் கடவுளோட
ஆசிர்வாதம் நமக்கு நிச்சயம் உண்டு.
யாரோ மூடநம்பிக்கையை கடைப்பிடிச்சதால நாமும்
அதையே கடைப்பிடிக்கிறோம். ஆனால் எந்த
கடவுளுக்கும்
காசோ வீடோ தேவையில்லை என்பதை புரிந்துகொள்ளுங்கள்
நண்பர்ளே. கடவுள் எல்லோருக்கும் முக்கியம்
தான் ஆனால் அவர் இருக்க
வேண்டியது கோவில்களில் அல்ல நம்ம
உள்ளத்துள,
அதுக்கு அவருக்கு காணிக்கை தேவையில்லை நல்ல
மனசுடைய
இல்லாதவங்களுக்கு உதவுகின்ற மனிதன்
தான்
தேவை நண்பர்களே எனவே தெருவில் வாழும்
மக்களுக்கு உதவுங்கள். ஒன்றுக்கும் உதவாத
உண்டியலில் காசை நிரைப்பதை விட
ஒரு வேலைக்கூட உணவில்லாமல் பசியில்
வாடும் குழந்தைகளின்
வயிறு நிறையட்டுமே அப்போழுது பார்பிர்கள் கோவிலில்
சிலையாக இருந்த கடவுளை அந்த குழந்தையின்
முகத்தில் நண்பர்களே!

Publisher: Pavithran kalaiselvan - 8:15 PM
,

தாஜ்மஹால் ரகசியம்

தாஜ்மஹால்
ரகசியம்
தாஜ் மஹால் ஷாஜஹானால் கட்டப்
பட்டது கிடையாது !!
முன்கதை சுருக்கம் இது தாங்க... தாஜ்
மஹால் ஷாஜஹானால் கட்டப்
பட்டது கிடையாது. அது அவர் ஒரு ராஜ்புட்
அரசரிடமிருந்து (ஜெய் சிங்) பிடுங்கியது.
மும்தாஜுக்காக ஷாஜஹான் தாஜ்
மஹாலைக் கட்டியாதக் கூறப்படுவது உலக
மஹா டகால்டி.
இப்ப விஷயத்துக்கு வருவோம். நம்ம பள்ளிக்கூட
காலத்துலேர்ந்து படித்துக்
கொண்டு வருவது என்னவெனில்:
தாஜ்
மகாலை கட்டியது ஷாஜஹான்.
அவரது மனைவி மும்தாஜின் நினைவாய் அவர்
இதைக் கட்டினார். இதை வடிவமைத்தவர் இரான்
நாட்டைச் சேர்ந்த உஸ்தாத் இசா என்பவர்.
தாஜ் மகாலை கட்ட 22 ஆண்டுகள் பிடித்தது.
தாஜ் மஹால் கட்டப் பட்ட காலம் கிபி 1631
- 1653. சுமார் 20000 பேர் இதற்காக
உழைத்தனர்.
இப்ப இதைக் கேளுங்க பேராசிரியர் பி. என். ஓக்
என்ன தன்னோட புத்தகம் "Taj Mahal : The True
Story" தனில் என்ன
சொல்றார்னா... தாஜ்
மஹால்ல் விஷயத்தில் உலகம்
முழுவது ஏமாற்றப் பட்டுள்ளது. தாஜ்
மஹால் மும்தாஜின் சமாதி அல்ல
அது ஒரு புராதான சிவன் கோயில்
என்று குறிப்பிடுகிறார். முன் காலத்தில் தாஜ்
மஹால்
"தேஜோ மஹாலயா" என்ற
பெயரால் அழைக்கப்
பெற்றது என்கிறார். நம்ம
ஷாஜஹான் ராஜ்புட் அரசர் ஜெய்
சிங் கிட்டேர்ந்து இந்த பெரிய
பில்டிங்கை ஆட்டைய
போட்டதா சொல்றார்.
அது மட்டுமின்றி ஷாஜஹான் தன்
சொந்த குறிப்புகளில்
(பாத்ஷாநாமா) "ஆக்ராவில் மிகவும்
அழகான
ஒரு மாளிகை தனை ஆட்டையைப் போட்ட விவரத்தைக்
குறித்து வைத்துள்ளார்". எனினும் அது தான்
தாஜ் மஹால் என அவர் எழுதவில்லை.
முன்னால் ஜெய்பூர்
மஹா ராஜாவின் குறிப்புகளில்
ஷாஜஹான் ராஜ்புட் மன்னன் ஜெய்
சிங்கிற்கு இது குறித்து அனுப்பிய
இரண்டு ஆணைகள் இன்னும் பத்திரமாய்
உள்ளன என்றும் கூறியுள்ளார்.
முகலாயர்கள் ஆண்ட காலத்தில்
கோயில்களைலும் பெரிய மாளிகைகளைலும்
இறந்த முகலாய மன்னர்களையும்
ராணிகளையும்
புதைப்பதை வழக்கமாய்
கொண்டிருந்தனர்
என்பது எல்லோரும் அறிந்ததே. உதாரணம்.
ஹுமாயுன், அக்பர், எத்மத் உத் தவுலா,
சப்தர்ஜங் இவர்கள் அனைவரும் புதைக்கப்
பட்டுள்ள இடங்கள் பெரிய
மாளிகைகளே என்பது குறிப்பிடத் தக்கது.
பேராசிரியர் ஓக் தன் விசாரணை தனை "தாஜ்
மஹால்" எனும்
பெயரிலிருந்து துவக்கினார்.
இது பற்றி அவர் "மஹால்" எனும்
வார்த்தை அப்கானிஸ்தான் முதல்
அல்ஜீரியா வரை எந்த
ஒரு நாட்டிலும் வழக்கத்தில்
இல்லை என்று குறிப்பிடுகிறார்.
வழக்கத்துக்கு மாறான இந்த "மஹால்"
எனும் சொல் நிச்சயம் மும்தாஜ்
மஹால் எனும்
பெயரிலிருந்து வரவில்லை என்று உறுதியாய்க்
கூறுகிறார். முதலாவதாய் மும்தாஜின் முழுப்
பெயர் மும்தாஜ் உல்
ஜமானி என்பதாகும். இரண்டாவதாய்,
"மும்தாஜ் என்ற பெயரின் முதல்
மூன்று எழுத்துக்களை நீக்கி விட்டு "தாஜ்" என்ற
பெயரைப்
பெற்றிருப்பது சற்றே விசித்திரமானது என்றும்
அவ்வாறு நடந்திருக்க வாய்ப்பில்லை என்றும்
கூறுகிறார். மேலும் ஷாஜஹான் மும்தாஜின்
காதல் கதை தாஜ் மஹால்
விவகாரத்தை மறைக்க உருவாக்கப் பெற்ற
ஒரு அம்புலிமாமா கதை என்கிறார். பல
ஆண்டுகளுக்கு முன்னர் நியுயார்க்கை சேர்ந்த
பேராசிரியர் மார்வின் மில்லர் தாஜ்
மஹாலின் சில மாதிரிகளை எடுத்து கார்பன்
டேட்டிங் முறைப் படி தாஜ் மஹாலின்
ஆயுளை கணித்தார். அவர் கருத்துப் படி தாஜ்
மஹாலின் வயது 300 ஆண்டுகளுக்கு மேல்
பழமையானது என்று குறிப்பிட்டுள்ளார்.
ஆல்பர்ட் மாண்டேஸ்லோ என்பவர் 1638ஆம்
ஆண்டு (மும்தாஜ் இறந்து ஏழு ஆண்டுகளுக்குப்
பிறகு), ஆக்ரா வந்த்துள்ளார். அவருடைய
குறிப்புகளில் தாஜ் மஹால் கட்டப்
படுவதற்கான எந்த ஒரு குறிப்பும் இல்லை. மேலும்
பீட்டர் மண்டி என்ற ஒரு ஆங்கிலேயர் மும்தாஜ்
இறந்து ஒரு ஆண்டுக்குள் ஆக்ரா வந்த
போது தன் குறிப்புகளில் இன்றைய தாஜ்
மஹாலின் கலை நயம்
பற்றி மிகவும்
புகழ்ந்து எழுதியுள்ளார். வரலாறின்
படி தாஜ் மஹால் மும்தாஜ் இறந்து 20
ஆண்டுகளுக்குப்
பிறகு கட்டி முடிக்கப்
பட்டது என்பது நினைவிருக்கட்டும். மேலும்
பேராசிரியர் ஓக் அவர்கள் ஏகப்பட்ட கட்டிட
நுணுக்கங்களை மையமாகக்
கொண்டு அது ஒரு இந்துக் கோயில்
என்று அடித்துக் கூறுகிறார். இன்றும் தாஜ்
மஹாலின் பெரும்
பகுதி பொது மக்களின்
பார்வைக்கு திறந்து விடப்படுவதில்லை. அதன்
காரணம் என்னவென்று கேட்ட எவருக்கும்
கிடைக்கும் பதில் - "பாதுகாப்பு" எனும்
ஒற்றை வார்த்தை தான்.
அது மட்டுமின்றி தாஜ் மஹாலினுள்
தலையில்லாது ஒரு சிவன் சிலையும் இந்துக்கள்
பூஜைக்குப் பயன் படுத்தும் பல
பொருட்களும் உள்ளன என்றும் அவர்
கூறுகிறார்.
அரசியல் காரணங்களார் திரு ஓக்
அவர்களின் புத்தகம் இந்தியாவில்
இந்திரா காந்தியால்
தடை செய்யப்பட்டது. அவர் கூறுவதை உறுதிப்
படுத்திக்கொள்ள ஐக்கிய நாடுகள்
சபையின் தலைமையில்
ஒரு தொல் பொருள் ஆய்வுக்
குழு ஒன்றை உருவாக்கி அவர்கள் தாஜ்
மஹாலை ஆய்வு செய்ய
வகை செய்ய வேண்டும் என்றும் கூறுகிறார்.

Publisher: Pavithran kalaiselvan - 8:09 PM
,

நம் பூமி! நம் அன்னை!

#பூமி
பூமி உருவாகி 480 கோடி வருடங்களாயிற்று. சூர்ய
குடும்பத்தின் 4வது மகள் தான் பூமி.
வெறும் பாறையாக இருந்தவள் பல
இயற்கை மாற்றங்ளால் கருவுற்றாள். மரம்
செடி கொடி விலங்குகள் பறவைகள்
நீர் வாழ் உயிரினங்கள் நுன்னுயிர்கள்
மனிதர்கள் என எல்லாரையும்
பெற்றெடுத்தாள் இந்த தாய்.
எல்லாரையும் அன்பாக
பார்த்து கொண்டாள். அவளுடைய
மிகப் பெரிய இதயத்துடிப்பு எரிமலைகள். தன்
பிள்ளைகளுக்கு தன்னை சமமாக பகிர்ந்தாள்.
ஆனால் காட்டுமிராண்டி கூட்டமான 6
அறிவு மனித குழந்தைகள்
பெத்தவளையே கூரு போட்டார்கள்.
பொன் விளையும் நம்
பூமி தாயை விலைக்கு விற்றார்கள்.
எனக்கு தான் சொந்தமென
உரிமை கொண்டாடினார்கள். தன்
பிள்ளைகளின் நலனுக்காக அவள்
எல்லாவற்றையும்
பொறுத்து கொண்டால்.
ஆனா தாயின் கருவிலே மனிதர்கள்
இரக்கமில்லா செயல்களை செய்தார்கள்.
இதை எல்லாம் கண்டு கோபமான தாய்
நிலநடுக்கம் சுனாமி சூறாவளி புயல்
ஏரிமலை சீற்றம் என இயற்களை சீற்றங்களால்
தன் பிள்ளைகளை கொல்கிறாள்.
தாயே பெத்த
பிள்ளையை கொல்கிறாள் என்றாள்
பிள்ளைகள் எவ்வளோ அரக்கர்களாக இருப்பர்.
ஆனா அவ தன்னுடைய நல்ல பிள்ளைகளையும்
இழந்ததால் மழையாக கண்ணீர்
வடிக்கிறாள். எல்லா உயிரினங்களுக்கும்
முதல் அன்னை நம் பூமி தான். நாம் பூமியின்
பிள்ளைகள்
என்று சொல்லும்போதே அனாதை என்கிற
வார்த்தை அழிந்துவிடுகிறதே. வெறும் 5 நிமிட
சுகத்தில் பிறந்த ஈனப்பிறவியான மனிதர்கள்
அனாதை என்கிற
வார்த்தையை பயன்படுத்தி பிரித்து பார்த்தானே.
என் தாய்க்கு நான் மனிதனாக
பிறந்து பாவம் செய்துவிட்டேன். உண்மையில
அவளுடைய செல்ல பிள்ளைகள் தாவரங்கள்
விலகுகள் பறவைகள் மற்றும் நீர் வாழ்
உயிரினங்கள். எனவே தான்
அவைகளுக்கு இயற்கையாகவே சில ஆபூர்வ
சக்தியை தந்திருக்கிறாள் 5 அறிவோடு.
விலங்குகளையும் மனிதர்களையும்
ஒப்பிட்டு பார்க்கையில் 5 அறிவும் ஒன்று தான்.
அந்த 5 அறிவும் நல்லது செய்பவை. மனிதன்
தன் 6 அறிவை பயன்படுத்தி கெட்ட
செயல்களை தான் அதிகம்
செய்கிறான். தன் அன்னையை கவனிக்க
மறந்துவிட்டான். இயற்கை சீற்றங்கள்
என்பது பூமிக்கு உடல்நலம்
சரியில்லை என்பதாகும். பூமியின் மூத்த
பிள்ளைகளான
மரங்களை வெட்டி கொன்றுவிட்டானே இந்த
மனிதன். பிறகு இயற்கை எப்படி சீராக இருக்கும்.
மழை எப்படி வரும். மோசமான சீதோஷன
நிலை தான் ஏற்படும். சாதி மதம்
மொழி இனம் என மனிதர்கள்
அடித்து கொள்கிறார்கள். என் தாய்
பாவிகளை பெற்றெடுத்துவிட்டோம் என
அழுகிறாள். அவள் கண்ணீரைத் துடைக்க
போவது யார். பஞ்சு மெத்தையில் படுப்பதைவிட
உங்கள் நிலத்தில் படுத்து ஒரு முறையாவது நம்
அன்னை பூமியின் தாலாட்டை கேளுங்கள்.
இன்னொரு பிறவி எனக்கு இருந்தால்
யாருக்கும் தீங்க செய்யாத
அவளுடை மூத்த பிள்ளையான மரமாக அவள்
கருவில் பிறக்க விரும்புகிறேன்.
நம் பூமி! நம் அன்னை!

Publisher: Pavithran kalaiselvan - 8:06 PM