Showing posts with label hamid. Show all posts
Showing posts with label hamid. Show all posts

Thursday, January 29, 2015

, ,

-----என்ன வாழ்க்கடா இது------

--

இங்க நான் எழுதி இருக்குற
எல்லாமே எனக்கு மட்டும் இல்ல ..
எல்லோருக்கும் , ஏன்
இதை இப்போ படிச்சுட்டு இருக்குற
உங்களுக்கும் கூட
எப்போதுமே வாழ்க்கைல
நடந்துட்டே இருக்குற சிலது தான்...
ஆனா அதென்னவோ தெரியல
இப்போ கொஞ்சம்
நாளா சுற்றி முற்றி சூழ்நிலைகள்
கொஞ்சம் ஓவர் டோஸ்
போயிட்டு இருக்குறதுனால ,
திடிர்னு எல்லாம்
ஒண்ணா சேந்து என்னையும்
மீறிக்கிட்டு (எப்பவும் போல)
இன்னிக்கு ஒரு கட்டுரையா வெளியாகிடிச்சு...
இந்தக் கட்டுரைல நிச்சயம் ரொம்ப
நயமான
எழுத்து நடை இருக்கவே இருக்காது...
அதாவது ,
வாழ்க்கைல என்கூட பல வருஷம்
பழகினவங்க , என் க்ளோஸ் பிரெண்ட்ஸ் ,
என்னை என் உறவுகள்
மூலமா அறிந்து கொண்டவர்கள் , ஏன்
என் வாழ்க்கைல திடிர்னு அறிமுகம்
ஆகுற மனிதர்கள்
முதற்கொண்டு அத்தனை பேருக்குமே என்னை பற்றி என்
மேல ஒரே ஒரு எண்ணம் தான்...
அது ,
*இதுக்கெல்லாம் வாழ்க்கைல என்ன
கவலை இருந்துடப் போகுது*
வ ரே வ...
இறந்தகால கவலைகளோ இல்ல
எதிர்கால
பயங்களோ எதுவுமே நம்மை பாதிக்காம
இந்த
நொடி சந்தோசமா வாழுறது தான்
வாழ்க்கை ' -
அப்படின்னு குறைஞ்சது ஒரு 2312
முறை கேட்டு இருப்போம் நாம
எல்லாருமே ...பல இடங்கள்ல பல
சூழ்நிலைகள்ள பல பேர் வாயில
இருந்து...
சரி ஓகே... எந்தக் கவலையும் பயமும்
இல்லாம வாழ்க்கையை இந்த
நொடி மட்டுமே அனுபவித்து வாழ்ந்துரலாம்...
ஒத்துக்கறேன்...அப்படியே இருக்கட்டும் ...
அட ராமா , அப்போ இந்த நொடி ,
வாழ்க்கைல
மினு மினுன்னு மின்னிக்
கொண்டிருக்குற பிரச்சனைகளை எங்க
கொண்டு போய் தள்ள ...
ஒன்னும் புரியலையே ...
வாழ்க்கைல எப்போ எந்த ரூபத்துல இந்த
'ட்விஸ்ட்'
அப்படின்னு ஒன்னு வருதுன்னு சத்தியமாவே ஒன்னும்
கண்டுபுடிக்கவே முடிய
மாட்டேங்குது...
என் அண்ணனோட நண்பர் ஒருத்தர்
இருக்காரு... அவர் சொல்லுவாரு -
'உன் வாழ்க்கையை டிசைன் பண்ற
டிசைனர் நீ தான்' -
அப்படின்னு...கேக்க
நல்லா இருக்கு இல்ல...ம்ம்ம்...
இந்த மாதிரி வாக்கியங்களை எல்லாம்
கேக்கும்போது பயங்கர வேகம்
வந்து அப்படியே பொங்கி எழுறது எல்லாம்
என்னமோ நிஜம் தான்... ஆனா , அந்த
'பொங்கல்' நீடிக்கிறது என்னமோ நம்ம
வாழ்க்கையோட அடுத்த 'ட்விஸ்ட்' வர்ற
வரைக்கும் தான்...
நான் வாழ்க்கைல எந்த ஒரு பெரிய
முடிவுகளுமே எப்போதும்
எடுப்பதே இல்லை பொதுவா...
அதாவது நான் எடுக்க மாட்டேன் , என்
அப்பா அம்மா அண்ணன்
யாராவது எடுப்பாங்கன்னு சொல்ல
வரலை... 'முடிவு'
அப்படின்னே ஒன்னு நான்
எடுக்கவே மாட்டேன்
அப்படின்னு சொல்ல வர்றேன்...
அதுக்கு காரணம் ,
'ம்ம்...சரி... இப்படி இப்படி பண்ணலாம்...
அப்போ இப்படி நடக்கும்...
அதுக்கப்புறம் நாம பண்ண
வேண்டியது இது...அதுக்கப்புறம்
அப்படி போகும்...அப்புறம்.......'
அப்படின்னு , இப்படி எல்லாம் full sketch
போட்டு பக்கா planning ஓட
அப்படியே ஒரு விஷயத்தை செய்ய
ஆரம்பிச்சேன்னு வெய்ங்க .....
ஸ்ஸ்ஸ்ஸ் ......... அது போகும் பாருங்க
வேற , கொஞ்சம் கூட
சம்மந்தமே இல்லாம
ஒரு புது விதமான புதுமையான
டைரக்சன் நோக்கி.....
அப்படியே அப்ப்ப்படி இருக்கும்......
சரி , நடக்குறது நடக்கட்டும்
அப்படின்னு ஒரு அசட்டு நம்பிக்கைல
ஒவ்வொரு முறையும்
அப்படியே அது கூடவே போயிடுறது உண்டு...அதுவும்
ஒவ்வொரு முறையும் ,
சரியாத்தான்
கூட்டிட்டு போகுதுன்னே நம்ப
வெச்சு நல்லா ஜம்முன்னு ஜில்லுன்னு அப்படியே சிரிக்க
வெச்சு சந்தோசமா கூட்டிட்டு போயி ,
குழிக்குள்ள தள்ளி விட்டுருது...
இப்படித்தான்... இதே தான்... இந்த
மாதிரி பல தடவை அடி பட்டு ,
மிதி பட்டு , நூடுல்ஸ் ஆகி ,
நொந்து போன ஒரு நல்ல
நாளா பாத்து இன்னொரு முக்கியமான
முடிவு எடுத்தேன்...
இனிமே எப்பவும் எந்த
முடிவுமே எடுக்க கூடாது'
அப்படின்னு...
முதல்ல
எதுனா அதுவா நடக்குறது நடக்கட்டும் ..
அதுக்கு அப்புறம் பாப்போம்
அப்படின்னு...
ஆனா , அதுக்கப்புறம் எல்லாம்
சரியா நடக்குதா அப்படின்னு நீங்க
கேட்டா , அங்க தான் நீங்க
தப்பு பண்றீங்க...
எப்பவும் போல இப்பவும் எப்பவும்
என்னைக்கும் என்னென்னைக்கும் ,
அதே நொந்த நூடுல்ஸ் தான்...
ஆனா , இப்போ எல்லாம் அதை எல்லாம்
சமாளிச்சு கொண்டு போற
டெக்னிக்ஸ்
ஓரளவுக்கு தெரிஞ்சுடுச்சு... இந்த
இடத்துல நீங்க
இன்னொரு முக்கியமான விஷயம்
நோட் பண்ணனும்... எப்பவும்
ஒரே வகையான 'நொந்த நூடுல்ஸ்' ஏ
கிடைக்கும்ன்னு நாம எதிர்பாக்க
கூடாது...நிச்சயம்
ஏமாந்துருவோம்...
அது சீசனுக்கு சீசன் மாறும்...
வகை வகையா.... நாம தான் எப்பவும்
விழிப்பு நிலையிலேயே இருக்கணும்...
முன் கூட்டியே முடிவுகள்
எடுத்து , போகாத திசை போய் ,
குழிக்குள்ள
விழுந்து நொந்து போறதை விட
இது கொஞ்சம் பெட்டரா இருக்குது ...
சரி...... இதெல்லாம் ஒரு பக்கம்
இருக்கட்டும் ......நான் முதல்ல சொல்ல
ஆரம்பிச்சதை விட்டுட்டு வேற
என்னென்னவோ சொல்லிட்டு இருக்கேன்...
*இதுக்கெல்லாம் வாழ்க்கைல என்ன
கவலை இருந்துடப் போகுது* -
கட்டுரையின் ஆரம்பத்தில் சொன்ன இந்த
வசனத்தை பத்தி தான் சொல்றேன்...
அது எப்படித்தான் என்னை பாக்குற
எல்லாருமே ஒரே மாதிரி இப்படியே நினைக்கிறாங்களோ...
ஒண்ணும்
புரியலையே புருஷோத்தமா...
ஆனா ,
யோசிச்சு பாத்தா என்கிட்டே ஒரு குணம்
உண்டு... அது நல்ல
குணமா இல்லை தேவை இல்லாத
ஒன்னான்னு மட்டும்
இப்போ வரை என்னால கண்டு புடிக்க
முடியலை... ஆனா ,
அப்படி ஒரு குணம்
என்கிட்டே இருக்குதுன்னு மட்டும்
நான்
கண்டு புடிச்சு வெச்சு இருக்கேன்...
அதாகப்பட்டது ,
என் பிரச்சனைகளை... என்
கவலைகளை... என் கஷ்டங்களை ... என்
துயரங்களை... நான் என்னைக்கும்
எப்பவும் யார்கிட்டயும்...
யார்கிட்டயும் , எப்பேர்பட்ட க்ளோஸ்
பிரெண்டா பழகக்
கூடியவங்களா இருந்தாலும் , நான்
பகிர்ந்து கொண்டதே இல்ல..... என்
கவலைகள் எங்க வீட்டைத்
தாண்டி வெளிய
போனதே கிடையாது...
கவலைகளை ஷேர்
பண்றதுக்கு அது என்னமோ எனக்கு புடிச்சதே இல்ல...
சந்தோசங்களை மட்டுமே ஷேர்
பண்ணிக்குவேன்
யார்கிட்டையுமே...எப்பவுமே...
என்னைப் பாக்குறவங்க , எப்பவும் நான்
ஜாலியா இருந்தே தான்
பாத்து இருப்பாங்க...
பல பேர்
என்கிட்டே நேரடியா கேட்டதுண்டு ,
'உனக்கு சோகமா எல்லாம் இருக்க
தெரியுமா ... உனக்கு அழுகத்
தெரியுமா' ..இப்படி எல்லாம்...
ஆனா உண்மைல , இந்த
வசனங்களை எல்லாம் கேக்கும்போது ,
நான் அப்படியே வலிக்காத
மாதிரியே நடிக்க
வேண்டி இருக்கும் பாருங்க...
அது தான் உலக
கொடுமை அப்படிங்கறது...
நான்
எப்பவுமே பாசிட்டிவா பேசுறதுனால ,
என் கூட ஒரு அஞ்சு நிமிஷம்
பேசினாலே அவங்க
பிரச்சனைகளை தீர்க்கும்
தெம்பு வந்துடுறதா , சிலர்
நம்பிட்டு இருக்காங்க...
ஒரு வேலை அது உண்மையா தான்
இருக்குமோ என்னவோ...கடவுளுக்கே வெளிச்சம்...
சோ , மற்றவர்கள் நொந்து போன
நேரத்துல
'போடும்மா சீதாவுக்கு ஃபோனு'
அப்படின்னு என்கூட
பேசி தெம்பாகி தெளிவாகுரவங்க
சிலர் இருக்காங்க... (இந்த இடத்துல என்
உண்மை பேர் 'சீதா லக்ஷ்மி'
என்பதை தெரியப்படுத்திக் கொள்ள
விரும்புகிறேன்)
இப்படி எல்லாம் இருக்குறதுனால
தான் - *இதுக்கெல்லாம் வாழ்க்கைல
என்ன கவலை இருந்துடப் போகுது* -
இந்த வசனத்தை நினைக்க
தோணுதுன்னு நினைக்கிறேன்
எல்லாருக்கும்...
'பிரச்சனை இல்லாத மனுஷன்
இல்ல..பிரச்சனை இல்லாதவன்
மனுஷனே இல்ல' - இது நான்
சொன்னதில்ல... எதோ படத்துல கேட்ட
வசனம்...
ம்ம்... பொலம்ப நினைச்சதை எல்லாம்
ஒரு வழியா ஒரு மாதிரியா பொலம்பி முடிச்சுட்டேன்...
இன்னும் கொஞ்சம் மீதி இருக்குது..
ஆனா ,
இப்போதைக்கு இது போதும்...
எப்படியும் இன்னும்
ரெண்டு நாள்லையோ இல்ல
நாளைக்கேவோ இல்லை இன்னும்
கொஞ்சம் நேரத்திலயேவோ ,
வாழ்க்கையோட அடுத்த 'ட்விஸ்ட்'
சத்தியமா வந்துரும்...
அதனால ... அடுத்த 'நொந்த நூடுல்ஸ்'
அப்போ மிச்சம் மீதியை பாப்போம்...
என்ன வாழ்க்கடா இது.........

Publisher: Pavithran kalaiselvan - 9:50 PM

Friday, December 19, 2014

,

மாற்றம் தேவை உரை1

உலகத்தை படைத்த கடவுளுக்கு பல லட்சங்களையும்
கோடிகளையும்
செலவழித்து கட்டுகிறோம் வீடு கோவில்களாக,
ஆனால் தெருவில் வாழும்
மக்களுக்கு உதவ யாருமில்லை. எல்லாம்
உள்ள இறைவனுக்கு ஏன்
நண்பர்களே காணிக்கை அதுக்கு பதிலாக
இல்லாதவங்களுக்கு உதவலாமே.
கோவில்களுக்கு கொடுக்காம
இருந்தா நல்லது நடக்காதா என்ன,
அப்படி கெட்டது நடந்தா அந்த
சுயநலமான கடவுள்
நமக்கு எதற்கு நண்பர்களே. ஆனால் நாம
இல்லாதவங்களுக்கு உதவினால் கடவுளோட
ஆசிர்வாதம் நமக்கு நிச்சயம் உண்டு.
யாரோ மூடநம்பிக்கையை கடைப்பிடிச்சதால நாமும்
அதையே கடைப்பிடிக்கிறோம். ஆனால் எந்த
கடவுளுக்கும்
காசோ வீடோ தேவையில்லை என்பதை புரிந்துகொள்ளுங்கள்
நண்பர்ளே. கடவுள் எல்லோருக்கும் முக்கியம்
தான் ஆனால் அவர் இருக்க
வேண்டியது கோவில்களில் அல்ல நம்ம
உள்ளத்துள,
அதுக்கு அவருக்கு காணிக்கை தேவையில்லை நல்ல
மனசுடைய
இல்லாதவங்களுக்கு உதவுகின்ற மனிதன்
தான்
தேவை நண்பர்களே எனவே தெருவில் வாழும்
மக்களுக்கு உதவுங்கள். ஒன்றுக்கும் உதவாத
உண்டியலில் காசை நிரைப்பதை விட
ஒரு வேலைக்கூட உணவில்லாமல் பசியில்
வாடும் குழந்தைகளின்
வயிறு நிறையட்டுமே அப்போழுது பார்பிர்கள் கோவிலில்
சிலையாக இருந்த கடவுளை அந்த குழந்தையின்
முகத்தில் நண்பர்களே!

Publisher: Pavithran kalaiselvan - 8:15 PM
,

தாஜ்மஹால் ரகசியம்

தாஜ்மஹால்
ரகசியம்
தாஜ் மஹால் ஷாஜஹானால் கட்டப்
பட்டது கிடையாது !!
முன்கதை சுருக்கம் இது தாங்க... தாஜ்
மஹால் ஷாஜஹானால் கட்டப்
பட்டது கிடையாது. அது அவர் ஒரு ராஜ்புட்
அரசரிடமிருந்து (ஜெய் சிங்) பிடுங்கியது.
மும்தாஜுக்காக ஷாஜஹான் தாஜ்
மஹாலைக் கட்டியாதக் கூறப்படுவது உலக
மஹா டகால்டி.
இப்ப விஷயத்துக்கு வருவோம். நம்ம பள்ளிக்கூட
காலத்துலேர்ந்து படித்துக்
கொண்டு வருவது என்னவெனில்:
தாஜ்
மகாலை கட்டியது ஷாஜஹான்.
அவரது மனைவி மும்தாஜின் நினைவாய் அவர்
இதைக் கட்டினார். இதை வடிவமைத்தவர் இரான்
நாட்டைச் சேர்ந்த உஸ்தாத் இசா என்பவர்.
தாஜ் மகாலை கட்ட 22 ஆண்டுகள் பிடித்தது.
தாஜ் மஹால் கட்டப் பட்ட காலம் கிபி 1631
- 1653. சுமார் 20000 பேர் இதற்காக
உழைத்தனர்.
இப்ப இதைக் கேளுங்க பேராசிரியர் பி. என். ஓக்
என்ன தன்னோட புத்தகம் "Taj Mahal : The True
Story" தனில் என்ன
சொல்றார்னா... தாஜ்
மஹால்ல் விஷயத்தில் உலகம்
முழுவது ஏமாற்றப் பட்டுள்ளது. தாஜ்
மஹால் மும்தாஜின் சமாதி அல்ல
அது ஒரு புராதான சிவன் கோயில்
என்று குறிப்பிடுகிறார். முன் காலத்தில் தாஜ்
மஹால்
"தேஜோ மஹாலயா" என்ற
பெயரால் அழைக்கப்
பெற்றது என்கிறார். நம்ம
ஷாஜஹான் ராஜ்புட் அரசர் ஜெய்
சிங் கிட்டேர்ந்து இந்த பெரிய
பில்டிங்கை ஆட்டைய
போட்டதா சொல்றார்.
அது மட்டுமின்றி ஷாஜஹான் தன்
சொந்த குறிப்புகளில்
(பாத்ஷாநாமா) "ஆக்ராவில் மிகவும்
அழகான
ஒரு மாளிகை தனை ஆட்டையைப் போட்ட விவரத்தைக்
குறித்து வைத்துள்ளார்". எனினும் அது தான்
தாஜ் மஹால் என அவர் எழுதவில்லை.
முன்னால் ஜெய்பூர்
மஹா ராஜாவின் குறிப்புகளில்
ஷாஜஹான் ராஜ்புட் மன்னன் ஜெய்
சிங்கிற்கு இது குறித்து அனுப்பிய
இரண்டு ஆணைகள் இன்னும் பத்திரமாய்
உள்ளன என்றும் கூறியுள்ளார்.
முகலாயர்கள் ஆண்ட காலத்தில்
கோயில்களைலும் பெரிய மாளிகைகளைலும்
இறந்த முகலாய மன்னர்களையும்
ராணிகளையும்
புதைப்பதை வழக்கமாய்
கொண்டிருந்தனர்
என்பது எல்லோரும் அறிந்ததே. உதாரணம்.
ஹுமாயுன், அக்பர், எத்மத் உத் தவுலா,
சப்தர்ஜங் இவர்கள் அனைவரும் புதைக்கப்
பட்டுள்ள இடங்கள் பெரிய
மாளிகைகளே என்பது குறிப்பிடத் தக்கது.
பேராசிரியர் ஓக் தன் விசாரணை தனை "தாஜ்
மஹால்" எனும்
பெயரிலிருந்து துவக்கினார்.
இது பற்றி அவர் "மஹால்" எனும்
வார்த்தை அப்கானிஸ்தான் முதல்
அல்ஜீரியா வரை எந்த
ஒரு நாட்டிலும் வழக்கத்தில்
இல்லை என்று குறிப்பிடுகிறார்.
வழக்கத்துக்கு மாறான இந்த "மஹால்"
எனும் சொல் நிச்சயம் மும்தாஜ்
மஹால் எனும்
பெயரிலிருந்து வரவில்லை என்று உறுதியாய்க்
கூறுகிறார். முதலாவதாய் மும்தாஜின் முழுப்
பெயர் மும்தாஜ் உல்
ஜமானி என்பதாகும். இரண்டாவதாய்,
"மும்தாஜ் என்ற பெயரின் முதல்
மூன்று எழுத்துக்களை நீக்கி விட்டு "தாஜ்" என்ற
பெயரைப்
பெற்றிருப்பது சற்றே விசித்திரமானது என்றும்
அவ்வாறு நடந்திருக்க வாய்ப்பில்லை என்றும்
கூறுகிறார். மேலும் ஷாஜஹான் மும்தாஜின்
காதல் கதை தாஜ் மஹால்
விவகாரத்தை மறைக்க உருவாக்கப் பெற்ற
ஒரு அம்புலிமாமா கதை என்கிறார். பல
ஆண்டுகளுக்கு முன்னர் நியுயார்க்கை சேர்ந்த
பேராசிரியர் மார்வின் மில்லர் தாஜ்
மஹாலின் சில மாதிரிகளை எடுத்து கார்பன்
டேட்டிங் முறைப் படி தாஜ் மஹாலின்
ஆயுளை கணித்தார். அவர் கருத்துப் படி தாஜ்
மஹாலின் வயது 300 ஆண்டுகளுக்கு மேல்
பழமையானது என்று குறிப்பிட்டுள்ளார்.
ஆல்பர்ட் மாண்டேஸ்லோ என்பவர் 1638ஆம்
ஆண்டு (மும்தாஜ் இறந்து ஏழு ஆண்டுகளுக்குப்
பிறகு), ஆக்ரா வந்த்துள்ளார். அவருடைய
குறிப்புகளில் தாஜ் மஹால் கட்டப்
படுவதற்கான எந்த ஒரு குறிப்பும் இல்லை. மேலும்
பீட்டர் மண்டி என்ற ஒரு ஆங்கிலேயர் மும்தாஜ்
இறந்து ஒரு ஆண்டுக்குள் ஆக்ரா வந்த
போது தன் குறிப்புகளில் இன்றைய தாஜ்
மஹாலின் கலை நயம்
பற்றி மிகவும்
புகழ்ந்து எழுதியுள்ளார். வரலாறின்
படி தாஜ் மஹால் மும்தாஜ் இறந்து 20
ஆண்டுகளுக்குப்
பிறகு கட்டி முடிக்கப்
பட்டது என்பது நினைவிருக்கட்டும். மேலும்
பேராசிரியர் ஓக் அவர்கள் ஏகப்பட்ட கட்டிட
நுணுக்கங்களை மையமாகக்
கொண்டு அது ஒரு இந்துக் கோயில்
என்று அடித்துக் கூறுகிறார். இன்றும் தாஜ்
மஹாலின் பெரும்
பகுதி பொது மக்களின்
பார்வைக்கு திறந்து விடப்படுவதில்லை. அதன்
காரணம் என்னவென்று கேட்ட எவருக்கும்
கிடைக்கும் பதில் - "பாதுகாப்பு" எனும்
ஒற்றை வார்த்தை தான்.
அது மட்டுமின்றி தாஜ் மஹாலினுள்
தலையில்லாது ஒரு சிவன் சிலையும் இந்துக்கள்
பூஜைக்குப் பயன் படுத்தும் பல
பொருட்களும் உள்ளன என்றும் அவர்
கூறுகிறார்.
அரசியல் காரணங்களார் திரு ஓக்
அவர்களின் புத்தகம் இந்தியாவில்
இந்திரா காந்தியால்
தடை செய்யப்பட்டது. அவர் கூறுவதை உறுதிப்
படுத்திக்கொள்ள ஐக்கிய நாடுகள்
சபையின் தலைமையில்
ஒரு தொல் பொருள் ஆய்வுக்
குழு ஒன்றை உருவாக்கி அவர்கள் தாஜ்
மஹாலை ஆய்வு செய்ய
வகை செய்ய வேண்டும் என்றும் கூறுகிறார்.

Publisher: Pavithran kalaiselvan - 8:09 PM

Wednesday, December 10, 2014

,

ஒப்பாரி

செத்த ஒப்பாரி
தமிழர் வாழ்வும் அதன் கலாச்சாரமும்
இசையுடன் பின்னிப் பிணைந்தவை .
எமது வாழ்வில் நாம் பிறக்கும்
பொழுது அம்மாவின் தாலாட்டுப்
பாடலிலும் , நாம் இறக்கும்
பொழுது ஒப்பாரிப் பாடல்களிலும்
இசையால் ஒன்று கலந்தோம் . இந்த
இரண்டு இசை வடிவங்களுமே இன்றைய
காலகட்டத்தில்
எம்மை விட்டு நீங்கி வருவதைக்
கண்கூடாகப் பார்க்கின்றோம் .
ஓர் இனத்தின் வளர்ச்சிப் போக்கில் முக்கிய
கட்டத்தை வகிப்பது அதன்
மொழியாளுமையும் கலாசாரப்
பாரம்பரியங்களுமே . அதற்காகவே இன
ஒடுக்குமுறையாளர்கள் , அந்த
இனத்தை அழிக்க இந்த
இரண்டு வழிகளையும் ஓர் ஆயுதமாகப்
பாவிக்கின்றனர் . என்னைப் பொறுத்த
வரையில் எமது பண்பாடான
தாலாட்டும் , ஒப்பாரியும் இந்த
வகைக்குள் அடங்குகின்றதோ என்ற அச்சம்
தான் வருகின்றது . ஒப்பாரியைப்
பற்றிய இந்தக் கட்டுரையினது நோக்கம்
வாசகர் மனதில் ஓர் மாற்றத்தை ஏற்படுத்த
வேண்டும் என்பதே .
ஒப்பாரிப் பாடல்களைச் செத்த
வீட்டிலே படிப்பின் வாசம் அறியாத
ஆச்சிகள் தங்களுடைய சோக
எண்ணங்களைக் கவிதை வடிவில்
பாடுவார்கள் . இதன்பொழுது அந்தக்
குடும்பத்தில் நடந்த நல்ல
விடயங்களோ அல்லது கெட்ட
விடயங்களோ இந்த ஒப்பாரி மூலம்
பூடகமாக வருவது ஓர் சிறப்பான
விடையமாகும் . அந்த படிப்பின் வாசம்
அறியாப் பெண்களின் கவி நயத்தையும்
சொல் ஆட்சியையும்
பார்த்து வியந்து போனவர்கள் பலர் .
ஒப்பாரியை எமது மக்கள் அன்றைய
காலங்களில் செத்த வீடுகளில் ஓர்
கிராமியக்
கலையாகவே பயன்படுத்தி வந்தனர் .
அன்றைய கால கட்டத்தில்
ஒப்பாரிக்கு பெயர் பெற்றவர்களாக
வடமராட்சியைச்
சேர்ந்தவர்களே இருந்து வந்துள்ளனர்.
இந்த ஆச்சிகள்
தங்களது உணர்வுகளையும்
துயரங்களையும் ஒரு விதமான இசைக்
கட்டமைப்புடன் இழுத்துப் பாடி ,
செத்தவீட்டில் அழாதவர்களையும் அழ
வைப்பதில் திறமை வாய்ந்தவர்கள் .
ஒப்பாரி பாடும் ஆச்சிகள்
செத்தவரை மிகவும் உரிமையுடன் "
என்ரை மோனை , ராசா , ராசாத்தி ,
ஆத்தை " என்று அழைத்து மிகவும்
உருக்கமாக தங்களின்
சோகத்தை வெளிபடுத்துவார்கள் . இந்த
ஒப்பாரி அன்றைய கால கட்டத்தில்
பரம்பரை பரம்பரையாகவே ஆச்சிகளிடம்
கடத்தப்பட்டு வந்தது .
நிலவோ நிலவுதவி என்ரை ராசா
எனக்கு
நிலவுபட்டால் ஆருதவி ........
பொழுதோ போழுதுதவி என்ரை ராச
எனக்குப் பொழுதுபட்டால்
ஆருதவி ...........
இந்த ஒப்பாரியில் கவித்திறனும்
சொல்லாட்சியும் மலைக்க
வைக்கின்றன . இப்படியான ஒப்பாரிப்
பாடல்கள் பின்பு நாட்டுக் கூத்திலும்
இடம் பெற்றதாக அறியக் கூடியதாக
இருந்தது.
எங்களிடையே ஆச்சிகளால் பாடப்பட்ட
ஒப்பாரிப் பாடல்கள் கூடிய
அளவு உறவு முறைகளையும் சமூகப்
பண்பாடுகளையும்
உள்ளடக்கியே பாடப்பட்டன .
கொத்த வேண்டாம் வெட்ட வேண்டாம்
என்ரை நீல நையினார் நீ
எனக்கொரு
கொள்ளி வைச்சால் காணுமடா
பார்க்க வேண்டாம் எடுக்க வேண்டாம்
என்ரை நீல நையினார் நீ எனக்குப்
பால் வார்த்தால் காணுமடா .......
நான் பெத்தேன் பிலாப் பழத்தை
இப்ப
பிச்சு வைச்சேன் சந்தியிலை .....
பள்ளிக்கூடம் தூரமெண்டு
என்ரை ராசாவை
நான் பக்கத்தே வைச்சிருந்தேன்
தோட்டம் தொலை தூரமெண்டு
என்ரை ராசாவை நான்
தொட்டிலிலை வைச்சிருந்தேன்
தகவல் : சின்னம்மா கரவெட்டி வயது 80
இந்த ஒப்பாரிப் பாடலிலே அந்தத்
தாயானவள்
தனது மகனது நிறத்தையும் தனக்குக்
கொள்ளி வைக்கவேண்டிய அவன்
தனக்கு முதலே மரணமாகி விட்டானே
என்று எம்மிடையே வந்த
பாண்பாட்டு முறைகளைத்
தனது ஒப்பாரியிலே சொல்லி
அழுகின்றாள் .
இன்னுமொரு தாயோ தனது
குடும்பத்தையே பொருளாதார
ரீதியில்க் கட்டிக் காத்து வந்த மகளைப்
பறிகொடுத்த சோகத்தில்
பின்வருமாறு பாடுகின்றாள்,
என்ரை ஆத்தை
நீ
வாரி வரத் திண்டிருந்தன்
என்ரை வண்ண வண்டி வாடுதணை
என்ரை ஆத்தை
நீ
கோலிவரத் திண்டிருந்தன்
என்ரை கோலவண்டி வாடுதணை
தகவல் : செல்லம்மா கரவெட்டி வயது 67
பொதுவாகவே இந்த வகையான
ஒப்பாரிப் பாடல்களில்
என்ரை ஆத்தை என்ற விழிப்பில்
சந்தர்பத்தற்கு ஏற்றவாறு என்ரை ராசா ,
மோனை , அப்பு என்று உரிமையுடன்
விழித்து ஆச்சிகள் தங்கள்
சோகத்தினை வெளிபடுதுவதைக்
காணலாம் .
ஒரு ஊரிலே வாழ்ந்த ஒருவர்
வேறு ஒரு இடத்திலே கலியாணம்
செய்கின்றார் .
அவர்களது குடும்பத்திலே பிரச்சனைகள்
வந்து கணவனும் மனைவியும்
பிரிகின்றார்கள் . இந்தநிலையில் அந்தக்
கணவன் ஒருநாள் செத்துவிட்டார் . அந்தச்
செத்த வீட்டுக்கு பிடிவாதக்கார
மனைவியோ வரவில்லை .
அபொழுது அந்தக் கணவனின்
குடும்பத்தில் உள்ள சொந்தக்காறப் பெண்
இப்படி ஒப்பாரி சொல்லித்
தனது வேதனையை வெளிப்
படுத்துகின்றார்,
ஊரெல்லாம் பெண்ணிருக்க
என்ரை ராசா நீ
ஊர்விட்டுப் போனாயோ .....
பக்கத்தே பெண்ணிருக்க
என்ரை ராசா நீ
பரதேசம் போனாயே.........
பாழ்படுவாள் வாசலிலே
என்ரை ராசா நீ
பவுணாக்குவிச்சாயோ .............
தகவல் மீனாட்சி துன்னாலை வயது 78
தமிழர் வாழ்வின் இறுகிய வாழ்வியல்
கட்டமைப்புக்குள் தாய்
வழி உறவுகளிலேயே கலியாணம்
செயிகின்ற
பண்பாட்டு முறை அன்றைய
காலகட்டங்களிலே இருந்து வந்துள்ளது .
மேலே வந்து விழுந்த ஒப்பாரிப்
பாடலானது இதையே காட்டி நிற்கின்றத
. இதனையொட்டி வழங்குகின்ற பல
சொலவடைகளையும் நாம் காணலாம் .
தங்கள் குடும்பங்ககளிலே ஏற்றபட்ட
பிரச்சனைகளையும் , ஒருதலைக்
காதல்களால் முறிந்த
திருமணபந்தக்களையும் செத்தவர்
மீது ஒப்பாரி மூலம்
சொல்லி அழுகின்ற வழமை அந்தக் காலப்
பெண்களிடம் இருந்து வந்துள்ளது .
தங்கள் குடும்பத்திலே பெண்
சகோதரங்களிடையே நீண்டகாலமாக
ஏற்றபட்ட பகை உணர்சிகளை ஓர்
பெரியம்மா செத்தபொழுது ,
ஒரு ஆச்சி இவ்வாறு பாடுகின்றார் ,
என்ரை ராசாத்தி
நீ பெத்தவை
சீனத் துவக்கெடுத்து என்னைச்
சிதற வெடிக்க வைக்கினமே ..........
என்ரை ராசாத்தி
நீ பெத்தவை
பாரத் துவக்கெடுத்து என்னைப்
பதற வெடி வைக்கினமே .......
இன்னுமொரு பாடல் ஒருத்தி தான்
தனது குடும்பத்தவரால் புறக்கணிக்கப்
படுவதை எண்ணிப் பெருங்
குரலேடுத்துப் பாடுகின்றாள் ,
படலையிலே ஆமணக்கு
என்ரை ராசாத்தி ........
நீ பெத்தவைக்கு
நான்
பாவக்காய் ஆகினனே .............
வேலியிலை ஆமணக்கு
என்ரை ராசாத்தி ..........
நீ பெத்தவைக்கு
வேப்பங்காய் ஆகினனே ...........
அன்றைய காலகட்டங்களிலே செத்த
வீட்டிலே ஒப்பாரி சொல்லி வாய்
விட்டு அழுவது தமிழர் வாழ்வியலில்
ஓர் சிறந்த உளவியல் மருத்துவ
முறையாகவே இருந்து வந்துள்ளது .
ஏனெனில் உறவுகளைப்
பறி கொடுத்தவர்கள் வாய்
விட்டு அழுதாலே அவர்களது மனப்பாரம
துயரமும் குறைவடையும் . அனால்
இன்றைய காலகட்டத்திலோ வாய்
விட்டு அழுவது நாகரீகக் குறைச்சல்
என்று எம்மவர்கள் எண்ணுகின்றார்கள் .
தனது குடும்பத்துடன் ஒரு சொந்தம்
கதைக்காமல் இருந்து விட்டுச் செத்த
வீட்டிலே வந்து நாட்டாமை செய்வதைப்
பொறுக்க மாட்டாத குடுபதுப் பெண்
இவ்வாறு பாடுகின்றாள்,
சொருகி வைச்ச எப்பை எல்லாம்
இப்ப
சோறள்ள வந்த தெணை ..........
பொட்டுடைச்ச கோழி முட்டை
இப்ப
போர்ச் சாவல் ஆச்சுதணை .............
இப்படியான ஒப்பாரிப் பாடல்கள் எல்லாம்
குடும்பத்திலே ஏற்பட்ட
பிரச்சனைகளைச் சொல்லி அழுகின்ற
பாடல்களாகவும் , இன்னும் சில பல
வருடங்களுக்கு முதலே செத்த
உறவுகளை நினைத்து வேறு செத்த
வீடுகளில் ஒப்பாரி வைப்பதையும்
காணலாம் ,
என்ரை அப்பு
நீ போய் சொல்லணை
நீங்கள் பெத்தவள்
இஞ்சை
சோகத்தாலை வாடயில்லை
உங்கடை
சோகத்தாலை வாடுதெண்டு ...........
என்ரை அப்பு நீ போய்ச் சொல்லணை
நீங்கள் பெத்தவள்
இஞ்சை காசாலை வாடயில்லை
உங்கடை
கவலையினால் வாடுதெண்டு...........
செத்த வீட்டிலே தனது கணவனைப்
பறிகொடுத்த மனைவியானவள்
தமக்குள் இருக்கும் நெருக்கத்தையும்
சில வேளைகளில் ஒப்பாரியாக
பாடுவாள் . அப்போது அதன்
சோகமானது மற்றவர்களையும் கலங்க
வைக்கும் ,
முத்துப் பதித்த முகம்
என்ரை ராசா
நீ
முழு நிலவாய் நின்ற முகம்
நினைப்பேன் திடுக்கிடுவேன்
என்ரை ராசா
உன்ரை நினைவு வந்த நேரமெல்லாம்
போகக் கால் ஏவினதோ என்ரை ராசா
இந்தப் பொல்லாதவள் தன்னை விட்டு
நாகரீகம் பேசுகினம் ...........
மூக்குப் படைச்சவையள்
இனி
முளிவியளம் பேசுவினம்
மூளி அலங்காரி இவள்
மூதேசி என்பினமே ................
அன்றைய காலகட்டங்களில் மதமாற்றம்
என்பது எமது சமூகதில் நடைபெற்றது .
அதில் பல கலப்புக் கலியாணங்களும்
நடைபெற்றது இருக்கின்றன . இறுகிய
கட்டமைப்பைக் கொண்ட
எமது சமூகமோ ஆரம்பத்தில் இந்தக்
கலப்புக்
கலியாணங்களுக்கு முரண்டு பிடித்தனர் .
ஒரு செத்த வீட்டில் ஒரு ஆண் கிறீஸ்தவ
பெண்ணைக் கலியாணம்
செய்திருந்தார் ; அவள் ஒரு நாள்
செத்து போய் விட்டாள் . பொதுவாக
கிறீஸ்தவர்கள் செத்தால்
அழுவது குறைவானதே . அவளைச்
சுற்றி இருந்தவர்கள்
ஒருவருமே அழவில்லை .
அபொழுது அந்தப் ஆணின் உறவுப் பெண்
ஒருவர்
பின்வருமாறு தனது சோகத்தை
ஒப்பாரியாக வெளிப் படுத்துகின்றார் ,
என்ரை ஆத்தை , நீ வேத சமயமென
இவை
விரும்பி அழமாட்டினமாம் ...
நாங்கள் சைவ சமைய மெணை
உன்னோடை சருவி அழ மாட்டினமாம
ஊர் தேசம் விட்டாய்
என்ரை ராசாத்தி
உறவுகளைதான் மறந்தாய் ...
மேபிள் துரைச்சியென்று
இஞ்சை
மேட்டிமைகள் பேசுகினம்
ஊரும் அழவில்லையென
என்ரை ராசாத்தி
உன்றை உறவும் அழவில்லையெணை
ஏறதாள 1980 கள் வரை இந்த ஒப்பாரிப்
பாடல்கள் வழக்கில் இருந்து வந்துள்ளன .
அதன் பின்னர் தொடர்ச்சியாக வந்த
விடுதலைப் போராட்டத்தில்
பிள்ளைகளைப் பறிகொடுத்த தாய்களின்
ஒப்பாரி,
நீ போருக்கு போனடத்தை
போராடி மாண்டாய் ஐயா
மகனே
பாரத்துவக்கெடுத்தோ
உங்களுக்கு
பயந்தவெடி வச்சானோ........
உங்களுக்கு பெரிய துவக்கொடுத்த
உங்கள பேசாமல் சுட்டெறிந்தான்
மகனார்
உன்ன சந்தியல கண்டடத்தை
உன்னைப் பெத்த கறுமி
தலைவெடித்துப் போறனையா.......
மகனார் நீகப்பலில வாராயெண்டோ
நாங்க கடலருகில் காத்திருந்தோம்
மகனே நீ
இருந்த இடத்தைப் பார்தாலும்
இரு தணலாய் மூளுதையா
நீ படுத்த இடத்தை பார்தாலும்
பயம் பயமாய் தோன்றுதடா.......
மகனே
உன்னைப் பெற்ற கறுமி நான்
இங்க உப்பலந்த நாழியைப்போல்
நீ இல்லாம
நாள்தோறும் உக்கிறனே.............
இவ்வாறு எமது வாழ்விலும்
பாரம்பரியத்திலும் ஊறிவிடிருந்த இந்த
ஒப்பாரி , இன்று அழிந்து போகும்
நிலையில் உள்ளது .
பொதுவாகவே சோகமான
இசை வடிவங்களை நாங்கள்
விரும்புவது இல்லை . இந்த
ஒப்பாரி அழிவதற்கு அதுவுங்
காரணமாக இருக்கலாம் . அத்துடன்
நாகரீகம் என்ற போர்வையில்
எமது வாழ்கையை கூட்டுப்புழு
வாழ்க்கை முறைக்கு மாற்றிக்
கொண்டதும் ஒரு காரணமாக
இருக்கிறது . கால ஓட்டத்தில் நாம்
பலதைத் தொலைத்து விட்டோம் , அதில்
இந்த ஒப்பாரியும் ஒன்று . இந்த
ஒப்பாரி சொல்லும் வழக்கை யார்
முன்னெடுத்துச் செல்லப்
போகின்றோம் ??????????????


hammid

Publisher: Pavithran kalaiselvan - 3:09 AM