காலம்காலமாக தமிழர்களின்
பாரம்பரியமான ஜல்லிக்கட்டு என்ற
வீரவிளையாட்டு மதுரை அருகில்
அலங்காநல்லூரில் சிறப்பாக
நடைபெறுவது நம்மில் பலர்
அறிந்ததே. இந்த வருடம்
ஜல்லிக்கட்டு நடைபெறுமா ???
வாடி வாசலில் கருப்புக் கொடி ....
பார்க்கவே துயரமாக இருக்கிறது ....
மாடுகளுக்காகவே ஒரு திருநாள்
கொண்டாடும் நாம்
மாடுகளை சித்ரவதை செய்கிறோமா?
சில
மாதங்களுக்கு முன்பு போடி மெட்டு பகுதியில்
இருந்து கேரளாவுக்கு மாடுகள்
ஏற்றிச் சென்ற லாரியில் பயணிக்க
நேர்ந்தது ... மாடுகளை ஏற்றி வந்த
வியாபாரியிடம் ஒரு பை ... அதில்
நிறைய பச்சை மிளகாய் ...
பச்சை மிளகாய் எதுக்குங்க
என்று கேட்டதற்கு .... லாரியின்
ஓட்டத்தில் நெருக்கமாக பிணையப்பட்ட
மாடுகளில்
ஒன்று சரிந்து அமர்ந்தாலும்
அடுத்தடுத்த மாடுகள்
சரிந்து அதன்மீது விழுந்து இறக்க
நேரிடும் மாடு செத்தால்
நல்லவிலைக்கு வியாபாரமாகாது ...
அதனால் மாடு விழுந்துவிட்டால்
அதனை எழுப்புவதற்கு இந்த
பச்சைமிளகாயை கிள்ளி அதன்
கண்ணில் தேய்ப்போம் ... எரிச்சலில்
மாடு துள்ளி எழுந்துவிடும்
என்றார் ....... இதைக்கேட்ட என்
கண்களில் நீர் ... மிளகாய் காரத்தால்
இல்லை ... மிருகவதையின்
காரணத்தால் ....
தமிழ்நாட்டிலிருந்து ஒரு நாளைக்கு கேரளவுக்கு அறுப்பு மாடுகள்
ஏற்றிச் செல்லும் லாரிகளின்
எண்ணிக்கை 100 க்கும் மேல ... ஒரு 6
டயர் லாரிக்கு 22 மாடுகள் ....
ஒரு பத்து டயர் லாரிக்கு 36
மாடுகள் ....அப்போ ஒரு நாளைக்கு ஏற்றுமதியாகும்
மாடுகளின் எண்ணிக்கை ?
தமிழகத்தின்
கோடியிலிருந்து கேரளாவுக்கு செல்லும்
வரை அந்த
மாடுகளுக்கு ஒரு சொட்டு தண்ணீர்
கூட காட்டமாட்டார்கள் .... ஆனால்
கேரளா பார்டர்
போடி மெட்டு பகுதிக்கு சென்றதும்
மாடுகளுக்கு தவிடும்
புண்ணாக்கும் சரமாறியாக
கிடைக்கும் ...
ஏன்னா மாடு தெளிவா இருந்தாத்தான்
கேரளாக் காரன்
காசு கனிசமா தருவான் ....
இதெல்லாம் மிருக
வதை கிடையாதாம் ....
காளைகளுக்கு மரியாதை செய்து அங்கீகாரம்
கொடுத்து களத்தில் விளையாட
விட்டு வேடிக்கைப் பார்ப்பது மிருக
வதையா ? தமிழ் மெல்ல மெல்ல
அழிந்து வருவது போல தமிழரின்
பாரம்பரியம் மிக்க
விளையாட்டுகளும்
அழிந்து விடக்கூடாது ....
உரிமைக்கு குரல் கொடுப்போம்
தோழர்களே ...
மாடுபிடிக்க போய்
மூக்கு உடைபட்டாலும் அதை வீரமாக
எண்ணியவன் நாங்க ....
விளையாட்டாக ஆடிய இந்த வீர
விளையாட்டுக்கு இத்தனை போராட்டம்னு நினைக்கும்
போது வேதனையாக உள்ளது.
Saturday, January 17, 2015
வீரம்
காதல்
ஆண்களின் காதலை விட பெண்களின் காதல்எப்பவும் அழகோ அழகு தான்...நம் கைகோர்த்து நடக்கநம் மடிசாய்ந்து உறங்கநம் தோல் சாய்ந்து அமரநம் நெஞ்சினில் சாய்ந்து கொள்ளநம்மோடு மனம் திறந்து பேசநம் நெஞ்சினில் இருக்கும் முடியைஇழுத்து விளையாடஇப்படி கணக்கில்லா ஆசைகள் இருந்தும்நாம் அருகில் இருக்கும் போது யாதும் அறியாதவளாய் அடக்கமாய் அமர்ந்துநம்மை இம்சிக்கும் போதுபெண்களின் காதல் அழகோ அழகு தான்...!விரட்டி விரட்டி காதலிக்கும் போதுஒரு வார்த்தை பேசமாட்டாளஎன்று ஏங்கிய நம்மைபேசி பேசியே கொள்ளும் போது பெண்களின் காதல் அழகோ அழகுதான்...!தங்கம்,மா,செல்லம்,அம்முகுட்டி,என்று நாம் கொஞ்சும் போது அவள்மௌனமாக சிரிக்கும் போதும்பெண்களின் காதல் அழகு தான்...!காய்ச்சல் என்று சிறிய பொய் சொன்னாலும் கூட உடனே நம்பிகண்ணீர் சிந்தி நம்மைகாதல் மழையில் நனைய வைக்கும் போதும்பெண்களின் காதல் அழகோ அழகு தான்...!ஆயிரம் முத்தங்கள் அலைபேசியில்கொடுத்துவிட்டுநேரில் ஒரு முத்தத்திற்கு நம்மை தவிக்கவிடும் போதும் பெண்களின் காதல் அழகோ அழகு தான்...!யாரேனும் நம்மை தவறாக பேசும் போதுஅங்கே பேசாமல் இருந்துவிட்டு வீட்டிற்க்குவந்ததும் நம்மை திட்டி தீர்க்கும் போதுபெண்களின் காதல் அழகோ அழகு தான்...?யார்கூடவும் பகிர்ந்து கொள்ளமுடியாதவிசயங்களை நம்மோடு பகிர்ந்து வெட்கப்படும் போது பெண்களின் காதல் அழகோ அழகு தான்...!நாம் முதல் முறை காதலை சொல்லும் போதுமுறைத்து பார்த்துவிட்டுபின்னர் நம்மை காதல் கண்கள் கொண்டுதாக்கும் போது பெண்களின் காதல் அழகோ அழகு தான்...!நம்மோடு வெளியே வரும் போது யாரும் பார்க்காத போதும் நம்மை யாரோ பார்த்து விடுவார்களோ என்று நம்மையும் சேர்த்து பயமுறுத்தும் போதுபெண்களின் காதல் அழகோ அழகு தான்...!வெண்ணிலா ஐஸ் கிரீம்டைரி மில்க் சாக்லேட்மாசா கூல்ட்ரிங்க்ஸ்இதுவே அதிகம் பிடிக்குமெனநம் செலவை சிக்கனம்செய்யும் போது பெண்களின் காதல் அழகோ அழகு தான்...!எதுவும் வேணுமா என்று கேட்டாலும்நீ கேட்டதே சந்தோஷமா இருக்கு என்றுநம்மளையே அசத்தவைக்கும் போதுபெண்களில் காதல் அழகோ அழகு தான்...!நம்மோடு பகிர்ந்து கொள்ள முடியாதஆசைகளை படுக்கை அறையில் தனியாக தலையனையோடு பகிர்ந்து கொள்ளும் போதுபெண்களின் காதல் அழகோ அழகு தான்...!ஆயிரம் உறவுகளை காதலுக்காய்தூக்கி எரியும் போதும்உறவுக்காய் காதலை தூக்கி எரியும் போதும் பெண்களின் காதல் அழகோ அழகு தான்...!இரண்டில் எது நடந்தாலும்அதிகம் பதிக்க படுவது பெண்கள் தான்...!ஆண்களின் காதல் தோல்வியைகாட்டிகொடுக்கும் தாடியும் பீடியும்...!ஆனால் பெண்களின்காதலும் சரி காதல் தோல்வியும் சரியாருக்குமே தெரியாதுஅவர்களுக்கு மட்டுமே அனுபவிக்கும் வலிவாழ்க்கை முழுவதும்...!சுதந்திரமான இந்த உலகில் சுதந்திரமற்ற பறவைகள் பெண்கள் தான்இந்த காதல் வானில் சிறகொடிந்தபறவைகளே அதிகம்...அதிலும்ஆண் பறவைகளை விட பெண் பறவைகளே அதிகம்...!மனதார விரும்பிமனதை கொடுத்தது ஒருவனோடு...மனமில்லாமல் போவது ஒருவனோடு....காதலன் ஒருவன்கணவன் ஒருவன்நரக வாழ்க்கைபெண்களின் காதலைஒருபோதும் ஒப்பிடமுடியாதுஆண்களின் காதலோடு...!!!என்றுமே ஆண்களின் காதலை விட பெண்களின்காதலில் தான் அழகும் வலியும் அதிகம்...
Publisher: Pavithran kalaiselvan - 9:41 PMமாரடைப்பு சில பாதுகாப்பு தகவல்கள்
வீட்டில் தனியாக இருக்கும் போது மாரடைப்பு
வீட்டில் தனியாக இருக்கும் போது மாரடைப்பு வந்தால் உங்களை நீங்களே எப்படி காப்பாற்றிக்கொள்வது ❓
வேலை பளுவின் காரணமாக, மற்றும் இதர சில பிரச்சனைகள் காரணமாக உங்கள் மனம் மிகவும் அழுத்தத்துடன் உள்ளது,
நீங்கள் மிகவும் படபடப்பாகவும், தொய்வாகவும் உள்ளீர்கள்.
திடீரென்று உங்கள் இதயத்தில் அதிக "வலி" ஏற்படுவதை உணர்கிறீர்கள்.
அந்த வலியானது மேல் கை முதல்தோள்பட்டை வரைபரவுவதை உணருகிறீர்கள்.
உங்கள் வீட்டில் இருந்து மருத்துவமனை ஒரு ஐந்து
மைல் தூரத்தில் இருப்பதாக வைத்துக்கொள்வோம்.
ஆனால் உங்களால் அந்த ஐந்து மையில் தூரத்தை கடக்க முடியாது என உங்கள் மூளை உங்களுக்கு சொல்கிறது
இந்த நேரத்தில் நம் உயிரை நாமே காக்க என்ன செய்யலாம்...??
துரதிஷ்ட வசமாக மாரடைப்பு ஏற்படும் போதெல்லாம் இறப்பவர்கள் அதிகமாக தனியாக இருந்திருப்பவராக உள்ளனர்..!
✊ உங்கள் இதயம் தாறுமாறாக துடிக்கிறது..
நீங்கள் சுயநினைவை இழக்க வெறும் 10 நொடிகள் தான் உள்ளது.
இப்போது நீங்கள் செய்ய வேண்டியது:
"தொடர்ச்சியாக மிக ஆக்ரோஷமாக இரும்ப வேண்டும்,
ஒவ்வொரு முறை இரும்புவதர்க்கு முன்னரும் மூச்சை இழுத்து விட வேண்டும்,
இருமல் மிக ஆழமானதாக இருக்க வேண்டும்,
இருதயம் இயல்பு நிலை திரும்பும் வரையில அல்லது வேறொருவர் உதவிக்கு வரும் வரையிலோ
ஒவ்வொரு இரண்டு நொடிக்கும் மூச்சை இழுத்து விட்டு இரும்பிக்கொண்டே இருக்க வேண்டும்.
மூச்சை இழுத்து விடுவதினால் நுரை ஈரலுக்கு ஆச்சிஜன் சீராக செல்ல வழி வகுக்கிறது,
இருமுவதால் இருதயம் நிற்பதில் இருந்து தொடர்ச்சியாக துடித்துக்கொண்டே இருக்க உதவும்,
இதனால் ரத்த ஓட்டம் சீரடையும்.
இரும்புவதால் ஏற்படும்
அதிர்வினால் இதயம் சீராக துடிக்கும்"..
பின்னர் இருதயம் சீரடைந்ததும், அருகில் உள்ள மருத்துவமனைக்கு செல்லலாம்..
இந்த தகவலை குறைந்தது உங்களின் பத்து நண்பர்களுக்காவது பகிருங்கள்.
❌ தேவை இல்லாத விசயங்களையும், ஜோக்குகளையும் பகிர்வோர்,
✅ உயிரை காக்கும் இது போன்ற விசயங்களையும் பகிருங்கள்....!!
வாட்ஸ்அப்பிர்க்காக பகிருபவர்
டாக்டர். மு. இஃப்திகார்
@ +919894487919
Tuesday, January 6, 2015
நவமணிகள் [GEMS]
பெரும்பாலான மணிகள்[முத்து,பவழம் தவிர்த்து] எரிமலைக்குழம்பிலிருந்து உருவானவை.இவை கனிம தாதுக்கள் ஆகும்.ஒளிவீசும் காரணத்தால் இது மணி எனலாயிற்று. மணி என்றால் ஒளி, அழகு எனப்படும்.
இந்தமணிகளின் வயது 100கோடி ஆண்டுகள்முதல் 500 கோடி ஆண்டுகள் வரை எனக் கணக்கீடு கூறுகிறது.பண்டைய மணிதன்
18 மணிகள் மட்டுமே அறிந்திருந்தான்.கணிமங்கள் 2000 வரை உள்ளன.இவற்றில் மணிகள் 85 மட்டுமே.இவற்றில் 16 மணிகள்
மட்டுமே நகைக்கு பயன்படுகின்றன.எந்த மணியும் 100% சுத்தமாக இருந்தால் நிறம் கிடையாது.மணிக்குள் தூசு போல் இருக்கும் தனிமம்தான் நிறத்தைத்தருகிறது. மணிக்குள் ஊடுருவும் ஒளி சிதறுவதால் ‘பளிச்’ என கண்சிமிட்டுகிறது.
மணிகளுக்குள் அமையும் தனிமத்திற்கேற்ப மணிகளின் நிறம் அமைகிறது. குரோமியம்-சிவப்பையும்,அலுமனியம்-பச்சை நிறத்தையும்,டைட்டோனியம்-நீலத்தையும்,இரும்பு-மஞ்சள் நிறத்தையும் தரும்.கடுமையான பொருட்க்களில் ஒளி ஊடுருவிச்செல்லும் போது அதன் வேகம் நொடிக்கு 1லட்சத்து 23 ஆயிரம் கி.மீ.ஆகும். மணியில்படும் ஒளியானது ஊடுருவி வெளியேற முடியாமல் எதிரொளித்து ஒளி வெள்ளமாக மின்னுகிறது. ஒளி ஊடுருவும் வேகம் குறையக்குறைய மணியின் தரம் உயர்கிறது.
இம்மணிகள் அந்நாளில் ஆற்றுப்படுகைகளிலும்,கடற்கரை மணலிலும் கிடைத்தன.மண்னுக்கு மேலே கிடைப்பது மணிகள்
மண்னுக்குள் தோண்டியெடுப்பது கனிமங்கள்.மணிகள் தனிமங்கள் பல இருந்தும் நவமணிகள் என ஏன் 9-ஐ மட்டும் நம் முன்னேர்கள் சிறப்பித்தார்கள் என்பது புரியவில்லை.
1.முத்து [PEARL]
உருண்டையாக முற்றுப்பெற்ற வடிவத்தினால் முத்து என்றாயிற்று. பெர்ல்-இந்த ஆங்கிலப்பெயர் பால் எனும் தமிழ் சொல்லிலிருந்து பிறந்தாகும். பாண்டியன் மனைவியின் காற்ச்சிலம்பு முத்துக்கள் உடையது[“யாமுடையச் சிலம்பு முத்துடை அரியே”சிலப்பதிகாரம்] அரி- பால் .
முத்துக்களில் ஆணிமுத்து,கட்டாணிமுத்து சிறந்தது.முத்தில் பழுப்பு, பச்சை,நீலம்,இளஞ்சிவப்பு,கறுப்பு நிறத்திலும் உள்ளன.
மழைத்துளி அல்லது பனித்துளி ஒன்று சிப்பியில் விழுந்து முத்தாகும் என்பது மக்கள் நம்பிக்கை ஆனால் கடலில் வெதுவெதுப்பான நீரோட்டமுள்ள இடத்தில் வாழும் சிப்பியின்உள்ளே சென்றுவிடும் மணல் புழுபோன்ற சிப்பியை உறுத்தல் செய்ய ஒருவித நீர்மம் [epithelium] சுரக்கிறது.பளபளப்பான சுண்ணாபுச்சத்துள்ள நீர்மம் மணலைச்சூழ்ந்து கெட்டியாகிறது.
இதுவே முத்தான “முத்தா”கிறது.
முத்தின் ஆயுள் 100 ஆண்டு முதல் 300ஆண்டுகள். இதன் வேதியல் பெயர் கால்சியம் கார்பனேட் …
2. பவழம் [CORAL ]
முத்துபோன்று கடலில் விளையும் ஒரு மணி பவழம். இதன் நிறம் பொதுவாக சிவப்பு என்றாலும் வெள்ளை,நீலம்,கறுப்பு நிறங்களிலும் உள்ளது.முத்தைப்போலவே வெதுவெதுப்பான நீர்ப்பகுதியில் பவழம் விளையும்.பவழப்பூச்சி[பாலிப்]எனும் கடல்வாழ் உயிரினம் கரையான்போல் கட்டும் புற்றே பவழப்பாறையாகிறது. இது பாறைபோல் இருக்காது,பல கொடிகள் கிளைகளையுடைய மரம்போல் இருக்கும். இதன் வேதியல் பெயரும்-கால்சியம் கார்பனேட் தான்.
3. வைரம் [Diamond]
ஆப்ரிக்கா,தென் ஆப்ரிக்கா நாடுகளில் அதிகம் தோண்டி எடுக்கப்படுகிறது.மண்னுக்கடியில் 1 கி.மீ ஆழத்தில் வைரம் கிடைக்கும்.சுத்தமான வைரம் நீரில் மிதக்கும்.நிறமற்ற வைரமே உயர்ந்த தரம்.இது பச்சை,சிவப்பு,மஞ்சள்,நீலம்,சாம்பல் நிறங்களிலும் கிடைக்கிறது.விலையுயர்ந்த வைரம் ஒரு சாதாரண கறித்துண்டுதான்,ஒரு துண்டு கரி,ஒரு துண்டு வைரம் இரண்டையும் எரித்தால் மிஞ்சுகின்ற சாம்பல் ஒரே தன்மையுடையது தான்.
இதன் வேதியல் பெயர்-கார்பன் இரும்பு ஆக்சைடு.
4. வைடூரியம் [Lapis Lazuli]
இது பூனைக்கண் எனவும் கூறுவர்.”தீதறு கதிர்”என சிலப்பதிகாரம் இதைக்கூறுகிறது.பொதுவாக இது பொன்னிறம் உடையது.
5. நீலம் [Saphire]
நீலநிறத்தின் காரணமாக இப்பெயர் பெற்றது.சங்ககாலத்தில் மணி என்றாலே நீலத்தைத்தான் குறித்தது.”நின்னது திகழொளி சிறப்பிருள் திருமணி”[பரி பாடல்]நீலமணிகள் வான்நீலம்,கடல்நீலம் எனவகைப்படுத்தப்படும்.இதில் வான்நீலமே சிறந்தது.நீலமணி ஆரஞ்சு,மஞ்சள்,பச்சைநிறங்களிலும் கிடைக்கிறது.அவற்றை சிவப்புநீலம்,கொம்புநீலம் என்பர்.
பால் பாத்திறத்தில் நீலக்கல்லைப்போட்டால் பால் நீலநிறமாக தெரியும்.இதுவெ உயர்ந்தநீலமாகும். இலங்கை நீலம்தான் உலகப்புகழ் பெற்றது.அமெரிக்காவில் வாஷிங்டனில் உள்ள லிங்கன்,கென்னடி சிலைகளின் முகம் மட்டும் நீலமணிகள்.
அலுமனியம் ஹைட்ராக்சைடு இதன் வேதியல் பெயர்.
6. மரகதம் [Emerald]
Emerald என்பது பாரசீகச்சொல் இத்ற்கு பச்சை என்பது பொருள்.பண்டைக்காந்தொட்டே மனிதன் அதிகம் விரும்பும் மணியாகும்.வைரத்தின் அளவுக்கு மதிப்புள்ளது.இதில் உள்ள குரோமியம் இதற்கு பச்சைநிறத்தைத்தருகிறது.
கொலம்பியா,வட கலிபோர்னியா பகுதிகளில் அதிகம் கிடைக்கிறது.
போராஸ் அலுமியம் ஆக்சைடு இதன் வேதியல்பெயராகும்.
7. மாணிக்கம் [Ruby]
அழகு,ஒளி,மினுமினுப்பு எல்லாவற்றிலும் வைரத்தை விட மாணிக்கம் சிறந்தது. வட மொழியில் இரத்தினம்,மற்றும் பதுமராகம்[தாமரைச்சிவப்பு] என்பர்.சிவப்பு நிறத்தைக்குறிக்கும்’ரூபஸ்’என்னும் இலத்தீன் சொல்லிலிருந்து ரூபி எனும் ஆங்கிலச்சொல் பிறந்தது.
“மழபாடியுள் மாணிக்கமே”என தேவாரம் பாடுகிறது.
“என் காற்சிலம்பு மணியுடை அரியே !”என்கிறது சிலப்பதிகாரம்.
இதன் வேதியல் பெயர்-அலுமனியம் ஆக்சைடு.
8. கோமேதகம் [Sardonyx or Hassinet]
நவ மணிகளில் விலை குறைந்தது கோமேதமே!
பசுவின் சிறுநீர் போன்ற நிறத்துடன் இருப்பதால் இப்பெயர் பெற்றது.
இதன் வேதியல் பெயர்-புளூரின் ஹைட்ராக்சைடு.
9. புஷ்பராகம் [Topaz]
‘ டோபாஸ்’ என்றால் மஞ்சள்கல் எனப்படும்.இது குறைந்தவிலையில் கிடைப்பதால் ஏழைகளின் வைரம் எனப்படும். இதன் வேதியல் பெயரும் புளூரின் ஹைட்ராக்சைடு தான்.

