Monday, December 15, 2014

Filled Under: ,

கடைசி நேர காதல்

Share
கடைசி நேர காதல்
December 13, 2014
ஒரு ஆண் தன்னுடன் கல்லூரியில் படிக்கும் ஒரு பெண்ணை வெறித் தனமாக காதலித்தான். அவளிடம் தன் காதலைச் சொல்ல தயங்கினான். தினமும் அவளின் நினைவிலே வாழ்ந்தான். ஒரு வழியாக தைரியத்தை வரவைத்து கொண்டு அப்பெண்ணிடம் தன் காதலை வெளிப்படுத்தினான். ஆனா அவளோ அவனுடைய உண்மையான காதலை புரிந்து கொள்ளவில்லை. அவனை திட்டிவிட்டாள். இதையே நினைத்து அவன் தினம் தினம் அழுதான். தன்னுடைய இரத்தத்தால் ஒரு கடிதம் எழுதி அதன் மூலம் காதலை இன்னும் அழுத்தமாக வெளிப்படுத்தினான். சாலையில் அப்பெண்ணை சந்தித்து அக்கடிதத்தை ஒப்படைத்தான். மேலும் ஆத்திரமடைந்த அவள் அந்த கடிதத்தை படித்து கூட பார்க்காமல் அதை துண்டு துண்டாக கிழித்து அவன் முகத்தில் விட்டெறிந்தாள். அந்த காகித துண்டுகள் காற்றினால் சாலையில் பறந்து சென்றன. அவனோ அவளுடைய கையை பிடித்து நான் என்னா பண்ணா நீ என்ன லவ் பண்ணுவ என்று கேட்டான். அதற்கு அவள் இப்போ நான் கிழித்தெறிந்த காகித்தை ஒட்டி கொண்டு வா நான் உன்னை லவ் பண்றேன் என கேலியாக சொன்னாள். உடனே அவன் சாலையில் ஓடி தான் எழுதிய கடிதத் துண்டுகளை சேகரித்தான். அதை அவள் பார்த்தாள். அப்போது திடீரென ஒரு வாகனம் சாலையில் வேகமாக வந்து அவனை இடித்து தூக்கி எறிந்தது. அவன் சேகரித்த காகித துண்டுகள் யாவும் காற்றில் பறந்தன. அவன் சாலையில் மடாரென கிழே விழுந்தான். அவன் தலையில் பலத்த அடிப்பட்டு இரத்தம் கசிந்தது. இச்சம்பவந்தை நேரில் கண்ட அவள் ஓடிவந்து அவனை பார்த்தாள். அவனும் இறந்துவிடுகிறான். அவனுடைய வலது உள்ளங்கை மட்டும் மூடி இருந்தது. அதை அவள் திறந்தாள் அப்போது ஒரே ஒரு காகித துண்டு மட்டும் அவன் கையில் இருந்தது அதில் நான் உன்னை காதலிக்கிறேன் என்கிற வரி மட்டுமே இருந்தது. அதை பார்த்ததும் அவள் கண்களில் நீர் வந்தது. அவனுடைய உடலை தன் மடியில் வைத்து கொண்டு ஐ லவ் யூ ஐ லவ் யூ என கதறி அழுதாள்...
;-(



0 comments:

Post a Comment